பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

ஹாலிவுட்டின் மார்வெல் ஸ்டூடியோவின் புதிய படம் 'தண்டர்போல்ட்ஸ்'. மார்வெல் படங்களில் வரும் கதாபாத்திரங்களை கொண்டே இந்த படத்தின் கதையும் அமைக்கப்பட்டுள்ளது. வால்ட் டிஷ்னியின் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை வெளியிட்டுள்ளது.
செபாஸ்டியன் இஸ்டான், டேவிட் கார்பர், வயாட் ராசூல், ஓல்கா குரிலென்கோ, லூயிஸ் புல்மேன், ஜெரால்டின் விஸ்வநாதன், கிறிஸ் பாயர், வெண்டெல் பியர்சு, கன்னா ஜான்-காமன் மற்றும் ஜூலியா லூயி-டிரெயிபஸ் ஆகியோர் நடித்துள்ளனர். ஜாக் சிரேயர் இயக்கி உள்ளார். இந்த படம் அமெரிக்காவில் கடந்த வாரம் வெளியானது. தற்போது இந்தியாவில் வெளியாகி உள்ளது. இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகி உள்ளது.
பொதுவாக கோடை விடுமுறையில் வெளியாகும் ஹாலிவுட் படங்கள் பெரிய அளவிலான புரமோசனுடன் வெளியாகும், ஆனால் இந்த படம் சத்தமின்றி வெளியாகி உள்ளது. சென்னையில் மல்டி பிளக்ஸ் தியேட்டர்களில் மட்டுமே வெளியாகி உள்ளது. 3டி மற்றும் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்திலும் வெளியாகி உள்ளது.