பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் | ஒரே படத்தில் 3 ஹீரோயின்கள் | தேவயானி அடித்தால் எப்படி இருக்கும் தெரியுமா? : ராஜகுமாரன் சொன்ன அதிர்ச்சி தகவல் | நான் நடிகர் ஆன கதை : ரஞ்சித் சொன்ன பிளாஷ்பேக் | கரூர் சம்பவம்: காந்தாரா நிகழ்ச்சி ரத்து | சாப்பாட்டுக்கு முக்கியத்துவம் தரும் தனுஷ்: அருண் விஜய் புகழாரம் | 7 வருடங்களுக்கு பிறகு கதை நாயகியாக நடிக்கும் ஆஸ்னா |
தமிழ் சினிமாவில் மூத்த காமெடி நடிகர் கவுண்டமணி. 40 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் பயணித்து வருகிறார். இவரது மனைவி சாந்தி, உடல்நலக் குறைவால் சென்னையில் நேற்று காலமானார்.
சில ஆண்டுகளாகவே உடல் நலக்குறைவால் பாதிப்பட்டு, படுக்கையில் இருந்த அவரை வீட்டிலேயே தனி நர்ஸ் அமர்த்தி, பாசமாக பார்த்து வந்துள்ளார் கவுண்டமணி. மற்றவர்களை சிரிக்க வைத்தவர், தனது மனதில் இருந்த இந்த சோகத்தை பெரும்பாலும் யாரிடமும் சொல்லவில்லை. இந்த தகவல் அவரின் நெருங்கியவர்களுக்கே நேற்று தான் தெரிய வந்துள்ளது.
இரங்கல் கூட தெரிவிக்காத நடிகர்கள்
பொதுவாகவே திரையுலகில் உள்ள பலர், சக நடிகர்கள் இறந்தால் கூட அஞ்சலி செலுத்த செல்வதில்லை. ஏன் ஒரு இரங்கல் கூட தெரிவிப்பதில்லை. அது கவுண்டமணியின் மனைவிக்கும் நிகழ்ந்துள்ளது. இத்தனைக்கும் கவுண்டமணி பல திரைப்பிரபலங்கள் மறைவுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்துவார். ஆனால் இன்றைக்கு அவரது மனைவி இறந்துள்ள நிலையில் நடிகர்கள் பலர் ஒரு இரங்கல் கூட தெரிவிக்காமல் உள்ளனர்.
ரஜினி, கமல், அஜித் ஆகியோரின் படங்களில் கவுண்டமணி நடித்துள்ளார். ஆனால் இந்த மூவருமே நேரில் சென்று அஞ்சலி செலுத்தவில்லை. ஒருவேளை இவர்கள் வெளியூர்களில் இருந்தால் கூட ஒரு இரங்கலாவது தெரிவித்திருக்கலாம். அதுவும் செய்யவில்லை. இதேப்போல் சூர்யா, விக்ரம், சிம்பு, விஷால் ஆர்யா, சிவகார்த்திகேயன், நடிகைகளான திரிஷா, நயன்தாரா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களும் இரங்கல் தெரிவிக்கவில்லை. அதேப்போல் காமெடி நடிகர்களாக இருந்து இப்போது ஹீரோக்களாக பயணித்து வரும் சந்தானம், சூரி, யோகிபாபு போன்ற நடிகர்களும் அஞ்சலி செலுத்தவில்லை, இரங்கலும் தெரிவிக்கவில்லை.
விஜய் உள்ளிட்ட பிரபலங்கள் அஞ்சலி
சாந்தியின் உடல் கவுண்டமணியின் இல்லமான சென்னை, தேனாம்பேட்டையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. சாந்தி மறைவு செய்தி கேட்டு ஏராளமான திரைப்பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். கவுண்டமணிக்கு ஆறுதல் கூறினர். நடிகரும், தவெக., தலைவருமான விஜய் நேரில் சென்று சாந்தி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். சத்யராஜ், சுந்தர் சி, செந்தில், ஜின்னி ஜெயந்த், வையாபுரி, அம்பிகா, கேஎஸ் ரவிக்குமார், பாண்டியராஜ், சித்ரா லட்சுமணன், ராஜேஷ், கருணாஸ், கார்த்தி, பிரகாஷ் ராஜ், பி வாசு, நிழல்கள் ரவி, கூல் சுரேஷ் உள்ளிட்டோர் சாந்தியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, கவுண்டமணிக்கு ஆறுதல் கூறினர்.
உடல் தகனம்
இன்று சாந்தியின் உடல் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சென்னை, பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் வைத்து தகனம் செய்யப்பட்டது.