பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

1947ம் ஆண்டு தியாகராஜ பாகவதரும், அன்றைய முன்னணி இளம் நடிகையுமான வசுந்தராதேவி ஆகியோர் நடிப்பதாக பிரமாண்டமாக விளம்பரம் செய்யப்பட்டு தொடங்கிய படம் 'உதயணன் வாசவதத்தா'. படத்தை டி.ஆர்.ரகுநாத் இயக்கினார், ஏ.எஸ்.ஏ.சாமி வசனம் எழுதினார். பாபநாசம் சிவன் இசை அமைத்தார்.
படப்பிடிப்பு தொடங்கும் முன்பே அனைத்து ஏரியாக்களும் விற்றுத் தீர்ந்தது. 25 சதவிகித படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் பாகவதர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் அவருக்கு பதிலாக பாடகர் ஜி.என்.பாலசுப்பிரமணியம் நடித்தார்.
இவருடன் எம்.எஸ்.சரோஜா, டி.பாலசுப்ரமணியம், கே.சாரங்கபாணி, காளி என்.ரத்னம், சி.டி.ராஜகாந்தம், என்.கிருஷ்ணமூர்த்தி, பி.எஸ்.வீரப்பா, டி.கே.சம்பங்கி, எம்.வி.மணி, கொளத்து மணி, வி.நா.ராஜா, டி. கமலம், கே.என்.ராஜம் மற்றும் என்.நாகசுப்ரமணியம் ஆகியோர் நடித்தனர்.
பாகவதர் நடிக்காததால் பல விநியோகஸ்தர்கள் வியாபாரத்தை துண்டித்தனர். அழகான காதல் கதை, ஹாலிவுட் ஒளிப்பதிவாளர் மார்கஸ் பர்ட்லே, வெளியான பாடல்கள் அனைத்தும் ஹிட். ஆனாலும் தியாகராஜா பாகவதர் நடிக்காததால் படம் படுதோல்வி அடைந்தது.