வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா | ஆதித்யா பாஸ்கர், கவுரி கிஷன் மீண்டும் இணைந்தனர் | மீண்டும் தமிழில் நடிக்கும் அன்னாபென் | அரசன் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சிவாஜி குடும்பத்தை கவுரவிக்கும் பராசக்தி படக்குழு | விஜய் தேவரகொண்டாவிற்கு வில்லன் விஜய் சேதுபதி...? | சூர்யா 47 : நெட்பிளிக்ஸ் முதலீட்டில் அமோக ஆரம்பம் ? | வா வாத்தியாருக்கு யு/ஏ சான்றிதழ்: ஆனாலும் பதைபதைப்பில் படக்குழு | இன்று ‛சேது' படத்துக்கு வயது 26 | தெலுங்கில் 'வா வாத்தியார்' படத்திற்கு வந்த சோதனை |

நடிகை சோனா தனது வாழ்க்கை கதையை 'ஸ்மோக்' என்ற பெயரில் வெப் தொடராக தயாரித்து, இயக்கி, நடித்து வருகிறார். இந்த தொடரின் படப்பிடிப்பு புட்டேஜ் அடங்கிய ஹார்டிஸ்கை படத்தில் பணியாற்றிய மானேஜர் எடுத்து வைத்துக் கொண்டு தர மறுப்பதாகவும், அவருக்கு ஆதராவாக பெப்சி செயல்படுவதாகவும் கூறி பெப்சி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் செய்தார். இந்த பிரச்னையில் நடிகர் சங்கம் தலையிட்டு தீர்த்து வைத்துள்ளது. ஹார்டிஸ்க்கும் சோனாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சோனா கூறம்போது, "நான் ஒரு விஷயத்துல இறங்கிவிட்டால் அதற்கு தீர்வு காணாமல் விடமாட்டேன். இப்போது இந்த விஷயம் நல்ல படியாக முடிந்திருக்கிறது. இதில் நடிகர் சங்கம் தலையிட்டதும் பெப்சி அமைப்பினர் பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். அதில் நடிகர் சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். எல்லா விஷயத்தையும் நான் சொன்னேன். அவர்கள் என் தரப்பு நியாயத்தை உணர்ந்து ஹார்டிஸ்கை வாங்கி கொடுத்தார்கள். இந்த விஷயத்தில் எனக்கு உதவிய பெப்சி நிர்வாகத்துக்கும், நடிகர் சங்கத்துக்கும், எனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இனி எனது பணியை நான் விரைவாக தொடர்வேன்'' என்றார்.