'லியோ'வில் என்னை வீணாக்கினார் லோகேஷ் : சஞ்சய் தத் கமெண்ட் | 68 வயதில் 3 நடிகைகளுடன் டான்ஸ் : கெட்ட ஆட்டம் போட்ட மொட்ட ராஜேந்திரன் | ஆடி வெள்ளி ரீமேக்கில் நயன்தாராவுக்கு பதில் திரிஷா | இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு |
பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் விஜய் தேவரகொன்டா, அனன்யா பான்டே, ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடிக்கும் படம் 'லைகர்'. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. அதில் உலகப் புகழ் பெற்ற குத்துச்சண்டை வீரரான மைக் டைசன் கலந்து கொண்டு நடித்து வருகிறார்.
அவருடன் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்து படக்குழுவினர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள். நேற்று படத்தின் நாயகன் விஜய் தேவரகொன்டா அது பற்றி பெருமையுடன் பதிவிட்டிருந்தார். இன்று படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான நடிகை சார்மி கவுர், “எனது புதிய அபிமானி நிச்சயம் இவர்தான். ஸ்டீல் பாடியுடன் தங்கமான இதயத்துடன் சூப்பர் கூல் சாதனையாளர். 'லைகர்' குழுவினர் அவர்களது சிறந்த நேரத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
படத்தின் இயக்குனர் பூரி ஜெகன்னாத்தின் குருவான ராம் கோபால் வர்மாவும் அக்குழுவினரின் புகைப்படங்களைப் பகிர்ந்து பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.