கவர்னருடன் சந்திப்பு ; மீண்டும் அரசியல் வரும் திட்டமா - ரஜினி பதில் | பாலிவுட் படங்களை புறக்கணிக்கும் கிரித்தி ஷெட்டி | மராட்டிய மொழி படத்தில் ஷான்வி | சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி | 200 ஆண்களுடன் படுக்கையை பகிர்ந்தேன்: அமெரிக்க நடிகை அதிர்ச்சி தகவல் | கணவன் வீட்டில் அனுபவித்த கொடுமைகள்: மனம் திறந்தார் மகேஸ்வரி | அப்பு நினைவாக ஆம்புலன்ஸ் வழங்கிய பிரகாஷ்ராஜ் | ஹீரோயின் ஆன மாலாஸ்ரீ மகள் | கணவர் இழப்பிலிருந்து மீண்டு வந்த மீனா | 14 வருடங்களுக்குப் பின் மீண்டும் விஜய் படத்தில் த்ரிஷா? |
சந்தானம் நடித்திருக்கும் சபாபதி படம் நவம்பர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று(நவ., 16) மாலை சென்னையில் நடைபெற்றது. அப்போது நடிகர் சந்தானத்திடம் ஜெய் பீம் சர்ச்சை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “ஜெய் பீம் படமென்று இல்லை. எந்த படமாக இருந்தாலும், நாம் ஏதோ ஒரு கருத்தை பேசுகிறோம் என்றால், உதாரணமாக நாம் இந்துக்களை பற்றி பேசுகிறோம் என்றால், எவ்வளவு உயர்த்தியும் பேசலாம். அதில் தப்பில்லை. ஆனால், கிறிஸ்துவர்கள் தவறு, அவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்று பேசக் கூடாது.
யாரையும் உயர்த்தி பேசலாம். ஆனால், அடுத்தவர்களைத் தாழ்த்தி பேசக் கூடாது. அது தேவையில்லாத விஷயம். அடுத்தவங்களை புண்படுத்துற மாதிரி பேசக் கூடாது. இதுதான் என் கருத்து. ஏனென்றால், சினிமா என்பது இரண்டு மணி நேரம் எல்லா மதத்தினரும், சாதியினரும் ஒன்றாக அமர்ந்து பார்ப்பது. உங்கள் படத்தில் நீங்கள் யாரையும் உயர்த்தி பேசிக் கொள்ளுங்கள். ஆனால், அடுத்தவர்களை தாழ்த்தி பேசாதீர்கள். அது தேவையில்லாத விஷயம்.
இனிவரும் இளைஞர்கள் சமூதாயத்திற்கு நல்ல சினிமாவை தர வேண்டும். இரண்டு மணிநேரம் செலவழித்து கவலைகளை மறந்து சாதி, மதம் கடந்து திரையரங்கு வருபவர்களுக்கு, அதற்கான விருந்தாக தான் திரைப்படம் இருக்க வேண்டும். நான் அதை செய்து கொண்டிருக்கிறேன். என் பக்கம் எதுவும் தவறு இருந்தால் சொல்லுங்கள். திருத்திகொள்ள வேண்டியதை திருத்திக் கொள்கிறேன்” என்றார்.