250 கோடி வசூலைக் கடந்த 'லோகா' | 3 நாளில் 80 கோடி கடந்த 'மிராய்' | 'இட்லி கடை' கதை இதுதான் என சுற்றும் ஒரு கதை | 'இளையராஜா' பயோபிக் : திரைக்கதை எழுத ரஜினிகாந்த் ஆர்வம் | த மெட்ராஸ் மிஸ்டரி : அது சாந்தனு அல்ல, யோஹன் சாக்கோ | மீண்டும் வெப் தொடரில் நடிக்கும் சித்தார்த் | இளயராஜாவை பார்த்து வளர்ந்தவன் நான்: ஏ.ஆர்.ரஹ்மான் புகழாரம் | 21ம் தேதி நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் | ஆன்லைன் சூதாட்ட வழக்கு: ஊர்வசிக்கு சம்மன் | பிளாஷ்பேக்: சத்யராஜை ஹீரோவாக்கிய 'சாவி' |
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத் 10 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் தனது முதல் பாடலிலேயே இந்த உலகத்தைத் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தார்.
அனிருத் இசையமைப்பில், தனுஷ் எழுதி பாடிய 'ஒய் திஸ் கொலவெறி' பாடல் பத்து வருடங்களுக்கு முன்பு 2011ம் ஆண்டு நவம்பர் 17ம் தேதி இப்பாடல் யு டியுபில் வெளியானது. பாடல் வெளியான உடனேயே ரசிகர்களை ரசிக்க வைத்து இந்தியா முழுவதும் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் வைரலானது.
மொழி எல்லைகளைக் கடந்து இந்தப் பாடல் பலராலும் பல விதங்களில் உருமாற்றம் செய்யப்பட்டு பாடப்பட்டது. இந்த ஒரு பாடலால் தனுஷுக்கு ஹிந்திப் படங்களில் நடிக்கும் வாய்ப்பும் வந்தது.
யு டியூப் என்ற வீடியோ தளத்தில் மூலை முடுக்குகளுக்கும் கொண்டு சேர்த்த முதல் பெருமை இந்த பாடலுக்கு உண்டு. அதன்பிறகே தமிழ் சினிமாவில் யு டியூப் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்தது. பலரும் யு டியூப் பக்கம் திரும்பினர்.
முதன் முதலில் 100 மில்லியன், 200 மில்லியன் பார்வைகளைக் கடந்த தமிழ் சினிமா பாடல் என்ற பெருமையைப் பெற்றது. இந்த 'கொல வெறி' சாதனையை சீக்கிரமே முறியடித்து தற்போது 1000 மில்லியன் சாதனையைக் கடந்துள்ள 'ரௌடி பேபி' பாடலிலும் தனுஷின் பங்கு உண்டு.