அஜித் எடுத்த அதிரடி முடிவு | மீண்டும் போலீஸாக மிரட்ட வரும் விஜய் ஆண்டனி | ஓடிடி ரிலீஸ் : ஹிந்தி சினிமாவை பின்பற்றுமா தமிழ் சினிமா ? | மோகன்லால் - ஜீத்து ஜோசப்பின் நேரு ரிலீஸ் தேதி அறிவிப்பு | அதிக உணவுகளை சூர்யா ஆர்டர் பண்ணுவது ஏன்? ஜோதிகா வெளியிட்ட சுவாரசிய தகவல் | ஜெயம் ரவியின் ‛காதலிக்க நேரமில்லை' | 'பருத்தி வீரன்' பஞ்சாயத்து : 'கமா' போட்ட சசிகுமார் | ரஜினி 171வது படத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் - ஜீவன்? | ஒரேநாளில் மோதிக்கொள்ளும் அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் நடித்த படங்கள் | அப்போ தெரியலையா? வனிதாவை வெளுத்து வாங்கிய கஸ்தூரி |
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் சிவகார்த்திகேயன் இதுவரையில் இசையமைப்பாளர்கள் அனிருத், இமான் ஆகியோருடன்தான் அதிகமாகக் கூட்டணி சேர்ந்துள்ளார். மற்ற இசையமைப்பாளர்களுடன் ஒரு சில படங்களில் மட்டுமே இணைந்துள்ளார். தற்போது சிவா நடித்து வரும் 'டான்' படத்திற்கு அனிருத் தான் இசையமைப்பாளர்.
சிவகார்த்திகேயனின் 21வது படத்திற்கு தமன் தான் இசையமைக்க உள்ளார். இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடி வரும் தமனுக்கு தமிழ், தெலுங்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
தமனுக்கு சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ள வாழ்த்தில், “இனிய பிறந்நதாள் வாழ்த்துகள் தமன் ப்ரோ, 'புட்ட பொம்மா' போல மேலும் பல ஹிட்களைக் கொடுக்க வாழ்த்துகள்,” என்று குறிப்பிட்டுள்ளார். அதற்கு தமன், “பிரதர் சிவகார்த்திகேயன், உங்கள் அன்புக்கு நன்றி, பின்றோம், தட்றோம், தூக்கறோம், எஸ்கே 21” என பதிலளித்துள்ளார்.
சிவகார்த்திகேயனின் 21வது படத்தை 'ஜதி ரத்னலு' தெலுங்குப் படத்தை இயக்கிய அனுதீப் இயக்க உள்ளதாக ஏற்கெனவே தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தை தமிழ், தெலுங்கில் தயாரிக்கப் போகிறார்களாம்.