ரஜினியை கண்டிப்பாக இயக்குவேன் : தேசிங்கு பெரியசாமி வெளியிட்ட தகவல் | மலையாள லெஸ்பியன் படத்திற்கு எதிர்ப்பு | ஹிந்தி படத்தை வெளியிடுவதேன்? உதயநிதி பதில் | சிறந்த அறிமுக ஹீரோவுக்கான விருது பெற்ற சதீஷ் | கவர்னருடன் சந்திப்பு ; மீண்டும் அரசியல் வரும் திட்டமா - ரஜினி பதில் | பாலிவுட் படங்களை புறக்கணிக்கும் கிரித்தி ஷெட்டி | மராட்டிய மொழி படத்தில் ஷான்வி | சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி | 200 ஆண்களுடன் படுக்கையை பகிர்ந்தேன்: அமெரிக்க நடிகை அதிர்ச்சி தகவல் | கணவன் வீட்டில் அனுபவித்த கொடுமைகள்: மனம் திறந்தார் மகேஸ்வரி |
நடன இயக்குநராக, நடிகராக, திரைப்பட இயக்குநராக அறியப்பட்டவர் பிரபுதேவா. இவர் நடிப்பில் நடிகர் ஹரிகுமார் இயக்கத்தில் ஸ்டுயோ கிரீன் தயாரிப்பில் விரைவில் வெளிவர உள்ள படம் தேள். வட்டி வசூல் செய்யும் கேரக்டரில் பிரபுதேவா நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக கோமாளி படத்தில் நடித்த சம்யுக்தா நடித்துள்ளார். பிரபுதேவா அம்மாவாக ஈஸ்வரி ராவ் நடித்துள்ளார்.
படத்தின் இசை வெளியீட்டில் கலந்து கொண்ட பிரபுதேவா பேசும்போது, ‛‛ஹரியும் நானும் பல ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்கள். இருவரும் உதவி நடன இயக்குனர்களாக பணியாற்றியிருக்கிறோம். இப்போது அவர் மீண்டும் புதிய தளத்தில் தன் திறமையை நிரூபிக்கவுள்ளார். அவரது இயக்கத்தில் நடிப்பது மகிழ்ச்சி. இந்தப்படத்தில் எனக்கு நடன காட்சியே இல்லை. மேலும் நான் இடது கை பழக்கம் கொண்டவனாக முதல் முறையாக நடித்திருக்கிறேன். தேள் படத்தில் ஆடல், பாடல், வசனம், காமெடி அதிகம் இல்லாத ஒரு இயல்பான கதை பாத்திரத்தில் நடித்துள்ளேன். இந்த படம் வித்யாசமான அனுபவத்தை கொடுத்தது. தமிழ் ரசிகர்கள் புத்திசாலி அதுதான் கொஞ்சம் பயமே என்றார்.