''நான் அதிர்ஷ்டசாலி'': நல்ல நண்பராக மணிகண்டன் கிடைத்த மகிழ்ச்சியில் ஷான்வி | 'கேம் சேஞ்சர்'--ல் விட்டதை 'பெத்தி'யில் பிடித்த ராம் சரண் | தயாரிப்பாளர் எம்.ராமநாதன் காலமானார் | குட் பேட் அக்லி - எந்த விழாவும் இல்லை, எந்த சந்திப்பும் இல்லை | ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்துள்ள ஹரி | மாரீசன் படத்தில் கோவை சரளா | உங்கள் ஊகங்களை நிறுத்துங்கள்: ரசிகருக்கு அட்வைஸ் செய்த மாளவிகா மோகனன் | 'சந்தோஷ்' படத்தை வெளியில் திரையிடுவேன் : பா ரஞ்சித் அடாவடி | பிளாஷ்பேக்: பைந்தமிழ் கற்பதில் தாமதம்; பட வாய்ப்பை இழந்த நடிகை பண்டரிபாய் | மே 16ல் ரீ-ரிலீஸாகும் ஆட்டோகிராப் |
நடிகைகளிலேயே கொஞ்சமும் தயங்காமல் துணிச்சலாக தனது கருத்துக்களை சொல்லக்கூடியவர் நடிகை பார்வதி. அதனால் தான் நடிகர் சங்கத்தில் நடிகர் திலீப்பை இணைத்த விஷயத்தில் மோகன்லாலுடனும், கசபா படத்தில் பெண்களை இழிவுபடுத்தும் விதமான கதாபாத்திரத்தில் நடித்தார் என மம்முட்டியுடனும் மோதல் போக்கை கடைபிடித்தார் பார்வதி. இதனாலேயே அவருக்கு மறைமுக ரெட்கார்டு போடப்பட்டு பட வாய்ப்புகளும் குறைந்தன.
இந்தநிலையில் ரசிகர்கள் மட்டுமல்ல, மலையாள திரையுலகமும் ஆச்சர்யப்படும் விதமாக மம்முட்டியுடன் இணைந்து 'புழு' என்கிற படத்தில் நடித்து வருகிறார் பார்வதி. தற்போது வெளியாகியுள்ள இந்தப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரில் மம்முட்டி சோபாவில் சீரியஸாக அமர்ந்திருப்பது போலவும் அவர் எதிரே பார்வதியும் அருகில் ஒரு சிறுவனும் கைகட்டி நின்றிருப்பது போலவும் அவர்களது உருவம் கண்ணாடியில் தெரிவது போலவும் உருவாக்கப்பட்டுள்ளது. பார்வதியின் இத்தனை வருட திரையுலக பயணத்தில் முதன்முதலாக மம்முட்டியுடன் ஒரே பிரேமில் இணைந்து இருப்பது போல வெளியான முதல் புகைப்படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.