டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் | தமிழ் படத்தில் மாலத் தீவு நடிகை | பிளாஷ்பேக்: பக்தி படத்தில் விஜயகாந்த் | பிளாஷ்பேக்: வில்லத்தனத்தில் மிரட்டி, வறுமையில் வாடிய நடிகை | ஐமேக்ஸ் தியேட்டர்கள் : 'ஜனநாயகன், தி ராஜா சாப்' படங்களுக்குப் புதிய சிக்கல் |

தெலுங்கில் நாகார்ஜூனா நடித்து வரும் கோஸ்ட் படத்தில் நாயகியாக நடிக்க காஜல் அகர்வாலர் கமிட்டாகியிருந்தார். ஆனால் அவர் கர்ப்பமானதை அடுத்து அதுகுறித்து தயாரிப்பாளரிடம் சொல்லிவிட்டு அப்படத்தில் இருந்து விலகி விட்டார். அதையடுத்து காஜல் நடிக்கயிருந்த வேடத்தில் இலியானா கமிட்டாகியிருப்பதாக ஒரு செய்தி வெளியாகி வந்தது.
ஆனால் அந்த செய்தியை கோஸ்ட் படக்குழு மறுத்துள்ளது. காஜல் அகர்வால் நடிக்கயிருந்த வேடத்தில் நடிக்க இலியானாவை ஒப்பந்தம் செய்யவில்லை என்று கூறியிருக்கும் அவர்கள் வளர்ந்து வரும் சில நடிகைகளிடத்தில் பேச்சுவார்த்தையில் இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதோடு, கோஸ்ட் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்க உள்ளது. அதற்குள் காஜல் வேடத்திற்கு ஒரு நடிகையை தேர்வு செய்து விடவேண்டும் என்று படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.




