ஜுன் 2ல் இரண்டு படங்களுக்கே முக்கிய போட்டி | மாவீரன் படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது | யாஷிகா ஆனந்த் - அஜித் மைத்துனர் ரிச்சர்ட் ரிஷி காதலா...? | 37 ஆண்டுகளை நிறைவு செய்த 'விக்ரம்' | பாபா படத்தை தொடர்ந்து மற்றொரு ரஜினி படம் ரீ ரிலீஸ் | கதாநாயகன் ஆகும் பிக்பாஸ் பிரபலம் | மும்பையில் தனுஷ்... மீண்டும் ஒரு பாலிவுட் படம் | த்ரிஷா படத்தில் கெஸ்ட் ரோலில் மூன்று பிரபல ஹீரோக்கள் | நாயகன் படம் போன்று இருக்கும் : கமல் | 150 வயது வரை வாழும் வித்தை எனக்கு தெரியும் : சரத்குமார் |
தெலுங்கில் அஜய் பூபதி இயக்கத்தில் சித்தார்த், சர்வானந்த், அதிதி ராவ் ஹைதரி மற்றும் அனு இம்மானுவேல் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள மகா சமுத்திரம் படம் வரும் அக்டோபர் 14ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ஒரு வெற்றிக்காக காத்திருக்கும் சித்தார்த் மற்றும் சார்வானந்த் இருவருக்குமே இது முக்கியமான படம். இந்த நிலையில் இந்தப்படத்தில் சர்வானந்த் கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தவர் நாகசைதன்யா தான் என்பதும் அதிதி ராவ் கேரக்டரில் சமந்தா நடிக்க இருந்தார் என்பதும் தற்போது தெரிய வந்துள்ளது.
இதே தயாரிப்பு நிறுவனத்தில் முந்தைய படமான, 96 படத்தின் ரீமேக்கான ஜானுவில் சமந்தாவும் சர்வானந்தும் இணைந்து நடித்து இருந்தனர். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியைத் தரவில்லை, அதனால் மகாசமுத்திரம் படத்திலும் சமந்தாவை நடிக்க வைக்கலாம் என நினைத்து இருந்தவர்கள் அவருக்கு பதிலாக அதிதி ராவை ஒப்பந்தம் செய்தனர். அதேபோல சர்வானந்த் கதாபாத்திரத்தில் முதலில் நாகசைதன்யா நடிப்பதாக தான் இருந்தது அதன் பிறகு சில காரணங்களால் அவரம் ஒதுங்கிக் கொள்ள அதன் பிறகு ரவி தேஜா நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டு அவரும் விலகி கொண்ட நிலையில் தான் சர்வானந்த் இந்த படத்திற்குள் வந்தார் என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.