நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

சமீபநாட்களாகவே தமிழ் திரையுலகில் ஒரு பக்கம் ஜெயம் ரவி (கெனிஷா) மற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் (ஜாய் கிரிசில்டா) ஆகியோர் தங்களது மனைவியை இன்னும் முறைப்படி விவாகரத்து செய்யாமல் பிரிந்து வாழ்வதும், அதற்குள்ளாகவே தங்களுக்கு ஏற்ற இன்னொரு துணையை தேர்ந்தெடுத்து அவர்களுடன் வெளிப்படையாகவே நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதும் ரசிகர்களிடம் பரபரப்பு ஏற்படுத்தி பேசு பொருளாகியுள்ளன. அதேசமயம் நடிகை சமந்தா இதற்கு முன்னதாகவே இதுபோன்று பிரபல பாலிவுட் இயக்குனர் ராஜ் நிடிமொருவுடன் நட்புறவில் இருந்து வந்ததும் இதேபோல பேசப்பட்டது.
சமந்தா முறைப்படி திருமண விவாகரத்து பெற்றுவிட்டாலும் கூட, இயக்குனர் ராஜு இன்னும் தனது மனைவியிடமிருந்து இருந்து விவாகரத்து பெறவில்லை. அதேசமயம் மீடியாக்களின் வெளிச்சத்தை தவிர்த்து அவ்வப்போது ஒரு சில நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து கொண்ட சமந்தா மற்றும் இயக்குனர் ராஜு, தற்போது அது குறித்த எந்த தயக்கமும் இன்றி வெளிப்படையாகவே ரசிகர்கள் மற்றும் புகைப்படக்காரர்களுக்கு போஸ் கொடுத்தபடி பொதுவெளியில் வருவதும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதும் என இருக்கின்றனர்.
சமீபத்தில் அப்படி ஒரு இடத்தில் இருந்து வெளியே வந்து, தனது காரில் ஏறி அமர அவரது பின்னாலேயே வந்த இயக்குனர் ராஜு தானும் அந்த காரில் ஏறி அமர்ந்துகொள்ள கார் கிளம்புகிறது, இது குறித்த வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் தற்போது வைரல் ஆகி வருகிறது.