'மிராய்' படத்திற்கு நீண்ட பதிவிட்டுப் பாராட்டிய அல்லு அர்ஜுன் | முன்பதிவில் 75 கோடி வசூலித்துள்ள 'ஓஜி' | ரேபிஸ் நோய் பாதிக்கப்பட்டவராக நடித்த புது ஹீரோயின் | இசையமைப்பாளர் பரத்வராஜ்க்கு குறள் இசையோன் விருது : கனடா உலக திருக்குறள் மாநாட்டில் கவுரவம் | தீபாவளி போட்டியில் இன்னும் சில படங்கள் | பிளாஷ்பேக்: எஸ்.பி.முத்துராமனை ஏமாற்றிய 50வது படம் | சுபத்ரா ராபர்ட் கதை நாயகியாக நடிக்கும் 'மெல்லிசை' | ராம்லீலா நாடகத்திலிருந்து பூனம் பாண்டே நீக்கம் | விஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு | பிளாஷ்பேக்: சிவாஜி நாடகம் பார்க்க ஸ்பெஷல் ரயில் |
லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக ரஜினியை வைத்து இயக்கி உள்ள படம் ‛கூலி'. இதில் ஸ்ருதிஹாசன், சத்யராஜ், நாகார்ஜூனா, உபேந்திரா, சவுபின் சாகிர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். சிறப்பு வேடத்தில் அமீர்கான் நடித்துள்ளார். மோனிகா என்ற பாடலுக்கு நடிகை பூஜா ஹெக்டே குத்தாட்டம் போட்டுள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். ஆக., 14ல் படம் ரிலீஸாக உள்ள நிலையில் நாளை படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடக்கிறது.
இந்நிலையில் இந்த படத்திற்கு சென்சாரில் ‛ஏ' சான்று கிடைத்துள்ளது திரையுலகினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பொதுவாக ரஜினி படங்களுக்கு அவரது ரசிகர்கள் தாண்டி குடும்ப ரசிகர்களும் அதிகம் வருவார்கள். அப்படி இருக்கையில் இந்த படத்திற்கு ‛ஏ' சான்று கிடைத்திருப்பது விநியோகஸ்தர்கள், தியேட்டர்கள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
ரஜினி படத்திற்கு ஏன் ‛ஏ' சான்று என விசாரித்து பார்த்ததில் படத்தில் நிறைய ஆக் ஷன் மற்றும் ரத்தம் தெறிக்கும் காட்சிகள் உள்ளதாம். பொதுவாகவே லோகேஷ் படங்களில் ஆக் ஷன் பிரதானமாக இருக்கும். ஆனால் இந்த படத்தில் அது கூடுதலாகவே இருக்கிறதாம். சில காட்சிகளை நீக்கினால் யு/ஏ சான்று தருவதாக தணிக்கையில் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் லோகேஷ் மற்றும் தயாரிப்பு தரப்பு மறுத்துவிட்டதாம். இதன் காரணமாக படத்தை ஏ சான்றுடனேயே வெளியிட முடிவெடுத்துவிட்டனர். இதை படக்குழுவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.