ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
நடிகை சமந்தா சில ஆண்டுகளாகவே தசை அழற்சி நோயால் அவதிப்பட்டு வருகிறார். அடிக்கடி ட்ரிட்மென்ட் போகிறார், ஓய்வெடுக்கிறார். அந்த நோய் பாதிப்புக்குபின் ஆளே மாறிவிட்டார். தவிர, திருமணம், விவகாரத்துக்குபின் அவருக்கான கிரேஸ் குறைந்துவிட்டது. இப்போது முன்னணி ஹீரோ படங்களில் அவர் ஹீரோயினாக நடிப்பது இல்லை. வெப்சீரிஸ், ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள படங்களில்தான் நடிக்கிறார். அதிலும் தமிழ் பக்கம் வருவதே இல்லை. ஐதரபாத்தில் செட்டில் ஆகிவிட்டவர், அங்கேதான் இருக்கிறார். தமிழில் அவர் நடித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது.
இந்நிலையில், வருங்காலத்தில் நான் படத்தயாரிப்பு, என் பிஸினசில் முழு கவனம் செலுத்தப்போகிறேன். நடிப்பதை நிறுத்தலாம் என்று பேசி இருக்கிறார். தமிழில் அவர் விஜய்சேதுபதி ஜோடியாக ‛சூப்பர் டீலக்ஸ்'ல் நடித்தார். பின்னர் ‛காத்துவாக்குல 2 காதல்' படத்தில் நடித்தார். இந்த படங்கள் வெளியாகி சில ஆண்டுகள் ஆகிவிட்டது. அடுத்து அவர் நடித்த ‛ஓ பேபி, யசோதா, சாகுந்தலம், குஷி' படங்கள் தமிழில் டப்பிங் ஆனது. அந்த படங்களும் ஹிட் ஆகவில்லை. ஆகவே, தமிழில் மார்க்கெட் போனநிலையில், தெலுங்கிலும் மார்க்கெட் குறைந்ததால் நடிப்பதை நிறுத்துவது என முடிவெடுத்து இருக்கிறாராம்.