டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

தமிழ் சினிமாவில் அதிகபட்ச வசூலாக ரஜினிகாந்த் நடித்த '2.0' படம்தான் இதுவரையிலும் உள்ளது. கடந்த ஏழு வருடங்களாக அந்த சாதனை முறியடிக்கப்படாமல் உள்ளது. கடந்த வாரம் வெளியான 'கூலி' படம் அந்த சாதனையை முறியடித்து 1000 கோடி வசூலை எட்டும் என படம் வருவதற்கு முன்பாக சிலர் கூறினார்கள். ஆனால், '2.0' படத்தின் வசூலையே 'கூலி' படம் தாண்டுமா என்பது சந்தேகம்தான்.
படம் வெளியாகி ஒரு வாரம் ஆகிவிட்டது. இன்றும், நாளையும் ஓரளவிற்கு படத்திற்கு வரவேற்பு இருக்கும். அடுத்த வார வேலை நாட்கள் ஆரம்பித்தால் வரவேற்பு மிகவும் குறைந்துவிடும் என்பதுதான் உண்மை நிலவரம். கடைசியாக நான்கு நாள் வசூலாக 404 கோடி என்றார்கள். இந்த வார இறுதி வசூலுடன் சேர்த்தால் 500 கோடியைத் தாண்ட வாய்ப்புள்ளது.
இதனால், தமிழ் சினிமாவில் 1000 கோடி வசூல் என்பது கனவாகவே தொடர்கிறது. இதற்கடுத்து அப்படி ஒரு எதிர்பார்ப்பை ரஜினிகாந்த் நடித்து வரும் 'ஜெயிலர் 2' படம்தான் தர வேண்டும். அந்தப் படம் அடுத்த ஆண்டுதான் வெளியாகும். அதுவரை தமிழ் சினிமா ரசிகர்கள் 1000 கோடி வசூலுக்காகக் காத்திருக்க வேண்டும்.




