நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் ‛ஹிருதயபூர்வம்'. பிரபல இயக்குனர் சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்க முக்கிய வேடங்களில் ‛பிரேமலு' புகழ் சங்கீத் பிரதாப் மற்றும் பூவே உனக்காக சங்கீதா ஆகியோர் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு யு சான்றிதழ் அளித்துள்ளனர்.
இந்த நிலையில் இந்த படத்தில் நடிகை மீரா ஜாஸ்மின் மற்றும் இயக்குனரும் நடிகருமான பஷில் ஜோசப் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்கள் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. சென்சார் சான்றிதழுடன் சேர்த்து அதனுடன் இணைக்கப்பட்ட படம் குறித்த விபரங்களில் நடிகர்கள் பட்டியலில் இவர்கள் இருவரது பெயரும் சிறப்பு தோற்றம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக மீரா ஜாஸ்மின் ‛ரசதந்திரம்' மற்றும் ‛இன்னத்தே சிந்தா விஷயம்' ஆகிய படங்களில் சத்யன் அந்திக்காடு டைரக்சனில் அதுவும் மோகன்லாலுடன் இணைந்து நடித்துள்ளார். அந்த நட்பின் அடிப்படையில் இந்த படத்தில் இவர்களது கூட்டணியில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்றே தெரிகிறது.