மீண்டும் தெலுங்கு படத்தில் நடிக்கும் பிரிகிடா சகா! | நாட்டின் மிகப்பெரிய நட்சத்திரத்தோடு போட்டியிட முடியுமா? சுதா கொங்கரா | மீண்டும் தள்ளிப்போனது 'தெறி' ரீ ரிலீஸ் | மதுரை, திருநெல்வேலி, திருச்செந்துார்... ஜீவா ஓடுவது ஏன்? | மீண்டும் ஷாருக்கானுடன் இணையும் அட்லி: 'டான் 3'ஐ இயக்குகிறாரா? | ரவி மோகனின் நிழலாக இருக்கும் கெனிஷா | 35 ஆண்டுகளுக்கு பிறகும் ஹிட்டான 'சுந்தரி கண்ணால் ஒரு சேதி' | பிளாஷ்பேக்: மறைந்த மலையாள நடிகர் ஜெயனை நினைவு கூறும் ஒரே தமிழ் திரைப்படம் “பூட்டாத பூட்டுக்கள்” | மங்காத்தா, தெறி: ரீரிலீஸ் டிரைலர் மோதல் | தோல்வியை நோக்கி, பிரபாஸின் 'தி ராஜா சாப்' |

கடந்த வருடம் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் ‛பிரேமலு'. இந்த படத்தில் கதாநாயகியாக நடித்த மமிதா பைஜூ தென்னிந்திய அளவில் புகழ்பெற்ற நடிகையாக மாறிவிட்டார். அந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்திருந்தவர் நடிகர் நஸ்லேன். அவருக்கும் இந்த படத்தில் பாராட்டுக்கள் கிடைத்தன. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளியான ‛ஆலப்புழா ஜிம்கானா' படமும் இவருக்கு வெற்றி படமாக அமைந்தது.
இந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 28ம் தேதி வெளியாக இருக்கும் ‛லோகா சாப்டர் 1 ; சந்திரா' என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் நஸ்லேன். சூப்பர் உமன் கதை அம்சத்துடன் உருவாகியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார்.
தனது மகள் நடித்துள்ள படம் குறித்து இயக்குனர் பிரியதர்ஷன் கூறும்போது, “கல்யாணி திரையில் பறந்து பறந்து சண்டை போடுவதை பார்க்கும் போது என்னால் வியப்பை அடக்க முடியவில்லை. அதேபோல் நஸ்லேனை பார்க்கும்போது ‛விஷ்ணு விஜயம்' படத்தில் நடித்த இளம் வயது கமல்ஹாசனை பார்ப்பது போன்று இருந்தது. இருவருமே திரையில் இயற்கையான ஒரு அப்பாவித்தனத்தை வெளிப்படுத்தும் தன்மை இருக்கிறது” என்று பாராட்டியுள்ளார்.




