மீண்டும் இணைந்த பிரபுதேவா, வடிவேலு | சமந்தாவின் ‛மா இண்டி பங்காரம்' எப்போது துவங்குகிறது | ‛கேஜிஎப்' நடிகர் தினேஷ் மங்களூரு மறைவு | அந்த 7 நாட்கள் படத்தில் மந்திரியாக நடிக்கிறார் கே.பாக்யராஜ் | ராம் சரண் படத்தில் நடிக்க மறுத்த சுவாசிகா | ஜனநாயகன் படத்தில் விஜய்யின் அபிமான இயக்குனர்கள் | என் செல்லம் சிவகார்த்திகேயன் : அனிருத் | பிளாஷ்பேக் : புராண படத்தில் நடித்த விஜயகாந்த் | பிளாஷ்பேக் : தெலுங்கு சினிமாவின் முதல் காமெடி நடிகர் | வெப் தொடரில் வில்லி ஆனார் தர்ஷனா |
தெலுங்கில் புஷ்பா படத்தில் நடித்து வருகிறார் அல்லு அர்ஜூன். இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இதில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்த படத்தை அடுத்து ஸ்ரீராம் வேணு இயக்கும் ஐகான் என்ற படத்தில் நடிக்கப்போகிறார் அல்லு அர்ஜூன்.
இப்படத்தில் நாயகியாக நடிக்க துவ்வாத ஜகநாதம், வைகுந்தபுரம்லு உள்பட இரண்டு படங்களில் ஏற்கனவே அல்லு அர்ஜூனுடன் நடித்த பூஜா ஹெக்டே கமிட்டாகியுள்ளார். இவர்கள் இருவரும் இணையும் மூன்றாவது படம் இதுவாகும். இவர்களுடன் இன்னொரு நாயகியாக உப்பென்னா படத்தில் நடித்த கிருத்தி ஷெட்டி கமிட்டாகியுள்ளார்.
தற்போது லிங்குசாமி தமிழ், தெலுங்கில் இயக்கி வரும் படத்தில் ராம் பொத்னேனியுடன் நடிக்கும் கிருத்தி ஷெட்டி அடுத்தபடியாக அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாகி இருக்கிறார். இதன் காரணமாக டோலிவுட்டின் முன்வரிசை நாயகி பட்டியலில் வேகமாக முன்னேறி வருகிறார்.