நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? | அபிநட்சத்திரா நடிக்கும் அன்னம் தொடரின் புரோமோ ரிலீஸ் | கார்த்திகை தீபம் சீரியலிலிருந்து விலகிய அயுப் | பிளாஷ்பேக் : 3 இயக்குனர்கள் இயக்கிய புராண படம் | பிளாஷ்பேக் : ஹீரோயின் ஆக நடித்த டி.ஏ.மதுரம் | கோவா திரைப்பட விழாவில் தமிழ் குறும்படம் | 110 நிமிடம் பிணமாக நடித்து பிரபுதேவா சாதனை | முதல்வர் குடும்ப திருமணத்தில் தனுஷ், நயன்தாரா : முகத்தை திருப்பிக் கொண்டு வெறுப்பை காட்டினர் |
மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் மம்முட்டிக்கு இன்று 70வது பிறந்த நாள். தமிழ்நாட்டில் கமல், ரஜினி என்ற இரு துருவங்கள் உருவான அதே காலகட்டத்தில் மலையாளத்தில் உருவான இரு ஆளுமைகள் மம்முட்டியும், மோகன்லாலும். மம்முட்டி கஷ்டப்பட்டு நடித்து பெயரும், விருதும் வாங்குவார் கமல்ஹாசன் மாதிரி, மோகன்லால் ரொம்ப சிம்பிளாக நடித்து இரண்டையும் தட்டிக் கொண்டு செல்வார் ரஜினி மாதிரி. தொழிலில் இரு துருவங்களாக இருந்தாலும் இருவரும் சகோதரர்களாக இருப்பது நட்பின் இலக்கணம்.
இன்று 70வது பிறந்த நாளை கொண்டாடும் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. அவரை பற்றிய ஒரு சிறிய பிளாஷ் பேக்...
முகமது குட்டி என்ற இயற்பெயர் கொண்டவர் சினிமாவுக்காக மம்மட்டி ஆனார். மலையாள ரசிகர்கள் வைத்த செல்லப் பெயர் மம்முக்கா.
மலையாளம், தமிழ் மற்றும் இந்தி என சுமார் 300 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ள அவர், தேசிய திரைப்பட விருதை மூன்று முறையும், கேரள அரசின் விருதை ஏழு முறையும், பிலிம்பேர் விருதையும் 13 முறையும் பெற்றுள்ளார்.
1951ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7ம் நாள் கேரளா மாநிலத்தில் கோட்டயம் மாவட்டத்திலுள்ள செம்பு என்ற இடத்தில் இஸ்மாயில் என்பவருக்கும், பாத்திமாவுக்கும் மகனாக ஒரு முஸ்லீம் குடும்பத்தில் பிறந்தார்.
ஆரம்ப கல்வியை புனித ஆல்பர்ட்ஸ் பள்ளி மற்றும் எர்ணாகுளம் அரசுப் பள்ளியில் முடித்த அவர், கொச்சியிலுள்ள மகராஜாஸ் கல்லூரியில் பட்டப்படிப்பைத் தொடங்கினார். பின்னர், எர்ணாகுளம் அரசு சட்டக்கல்லுரியில் சட்டம் பயின்ற அவர், மஞ்சேரியில் இரண்டு ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றினார்.
கல்லூரிப் பருவத்திலேயே நாடகத்தில் நடிக்கத் தொடங்கிய மம்முட்டி 1971ம் ஆண்டு அனுபவங்கள் பாலிச்சகள் மற்றும் காலச்சக்கரம் படங்களில் சிறிய கேரக்டர்களில் நடித்தார். எம்.டி. வாசுதேவன் இயக்கத்தில் தேவலோகம் என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். இந்த படம் வெளிவரவில்லை.
1980 ஆம் ஆண்டு மீண்டும் எம்.டி. வாசுதேவன் நாயர் இயக்கத்தில் வெளிவந்த வீல்கணுண்டு ஸ்வப்ணங்கள் திரைப்படம் மம்முட்டியின் திரை வாழ்க்கையை தொடங்கி வைத்தது. மேலா, திருஸ்னா படங்கள் ஹீரோவாக நிலை நிறுத்தியது.
1989ல் கே.மது இயக்கத்தில் வெளிவந்த மௌனம் சம்மதம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து அழகன், தளபதி, கிளி பேச்சு கேட்கவா, ஆனந்தம், மக்கள் ஆட்சி, மறுமலர்ச்சி, விஷ்வ துளசி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் உள்பட பல படங்களில் நடித்தார்.
திரியத்திரி என்ற திரைப்படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமானவர், டாக்டர் பாபா சாஹேப் அம்பேத்கார் படத்தின் மூலம் தேசிய அளவில் புகழ்பெற்றார்.
கம்யூனிச சித்தாந்தத்தில் நம்பிக்கை கொண்ட மம்முட்டி அக்கட்சியின் அனுதாபியாக இருக்கிறார். உறுப்பினராகவில்லை. கட்சியின் மாநாட்டில் கலந்து கொண்டு பேசி இருக்கிறார். நண்பர்களுக்காக தேர்தல் பிரச்சாரமும் செய்திருக்கிறார். பல சமூக பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.
ஒரு முறை மம்முட்டியிடம் நீங்கள் கேரளாவின் முதல்வர் ஆவீர்களா? என்று கேட்கப்பட்டபோது "கேரள மக்கள் தங்கள் முதல்வரை திரையரங்கில் தேடுவதில்லை" என்று பதில் அளித்தார். இந்த பதில் இந்திய அளவில் டிரண்ட்டிங் ஆனது.
நாமும் மம்முட்டியை வாழ்த்துவோம்.