அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன விஷால் | பிரதீப் ரங்கநாதன் , அட்லி புதிய கூட்டணி! | '7ஜி ரெயின்போ காலனி 2' படத்தில் கேமியோ ரோலில் சோனியா அகர்வால் | 'வாரணாசி' படத்திற்காக அமெரிக்கா பறந்த ராஜமவுலி! | முறுக்கு மீசை, நீளமான முடி புதிய தோற்றத்தில் அருண் விஜய்! | 'ஜெயிலர் 2' படத்தில் எந்தவொரு பாலிவுட் நடிகரும் இல்லை! | முதல்முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்கும் சாய் பல்லவி! | 'யாமிருக்க பயமே' இயக்குனருடன் கைகோர்க்கும் நித்யா மேனன்! | 'அபூர்வ சகோதரர்கள்' படத்தில் நாங்கள் எடுத்த ரிஸ்க்: கமல்ஹாசன் | மே மாதப் படங்கள்: 2026ன் முதல் வசூல் வெற்றி |

எல்லா கதைகளிலும், ராமாயணம், மகாபாரதத்தின் தாக்கம் இருக்கும் என்பார்கள். சில படங்கள் நேரடியாகவே இந்த இரண்டையும் தழுவி எடுக்கப்படுகிறது. மணிரத்தினத்தில் பெரும்பாலான படங்கள் இவற்றை தழுவியதாக இருக்கும். பிரபாஸ் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் ஆதிபுருஷ் படம் இந்த வரிசையிலான படம் தான்.
தற்போது கன்னடத்தில் ராமாயண கதையை தழுவி லங்கே என்ற படம் தயாராகி உள்ளது. லங்கே என்பது இலங்கையை குறிக்கும் சொல். இதனை ராம் பிரசாத் இயக்கி உள்ளார். யோகேஷ், சஞ்சாரி விஜய், காவ்யா ஷெட்டி, நடிக்கிறார்கள். படம் வருகிற 10ம் தேதி வெளிவருகிறது.
இந்த படம் பற்றி இயக்குனர் ராம்பிரசாத் கூறியதாவது: கர்நாடகாவில் மிக நீண்ட காலத்திற்கு முன்பு நடந்த ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இந்த படம் உருவாகிறது. இந்த படத்தின் கதையும், இதில் இடம் பெறும் சில சம்பவங்களும் ராமாணயத்தில் இடம்பெற்றவையாக இருந்த ஒற்றுமையை கண்டு வியந்து போனேன்.
ராமன், சீதை, ராவணன், அனுமன் காதாபாத்திரங்களை ஒத்த கேரக்டர்களே இந்த படத்திலும் இடம்பெறுகிறது. அதனால்தான் படத்திற்கும் லங்கே என்று டைட்டில் வைத்திருக்கிறோம். என்றார்.