பழம்பெரும் ஹிந்தி நடிகர் மனோஜ் குமார் காலமானார் | ஏப்ரல் முதல் வாரம் முழுவதும் நெட்பிளிக்ஸ் ஆதிக்கம் | ரூ.52 கோடி வசூலுடன் வலம் வரும் வீர தீர சூரன் | 'இட்லி கடை' புதிய வெளியீட்டுத் தேதி எப்போது? | 'குட் பேட் அக்லி' முன்பதிவு இன்று முதல் ஆரம்பம் | பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் | அருண் விஜய் படத்திற்கு பாடல் பாடிய தனுஷ் |
தெலுங்கு சினிமாவின் அதிரடி நடிகரான டாக்டர் ராஜசேகர், எத்தனை வயதானாலும், நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என பிடிவாதமாக இருப்பவர்., சமீபத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்ட அவர், தற்போது அதிலிருந்து மீண்டுவந்து மலையாளத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் வெளியாகி ஹிட்டான ஜோசப் என்கிற படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார். இந்தப்படத்தை அவரது மனைவி ஜீவிதாவே டைரக்ட் செய்கிறார்.
இந்தநிலையில் சமீபத்தில் ஸ்ரீவாஸ் என்பவர் இயக்கத்தில் கோபிசந்த் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்ட படத்தில் வில்லனாக டாக்டர் ராஜசேகர் நடிக்க உள்ளார் என சொல்லப்படுகிறது. இதற்கு முன்னதாக தனி ஒருவன் தெலுங்கு ரீமேக்கில் அரவிந்த்சாமி கேரக்டரில் அவர் தான் நடிப்பதாக இருந்து கடைசி நேரத்தில் மாறிப்போனது. அதுமட்டுமல்ல, டாக்டர் ராஜசேகர் அறிமுகமான சமயத்தில் புதுமைப்பெண் உள்ளிட்ட சில படங்களில் வில்லனாக நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.