ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் |
விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் டைரக்ஷனில் லியோ என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 50 சதவீதம் முடிவடைந்து விட்டதாக தெரிகிறது. இந்த படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக யாருடைய டைரக்சனில் விஜய் நடிக்க இருக்கிறார் என பல யூகங்கள் சோசியல் மீடியாவில் ஓடிக்கொண்டிருக்கின்றன. அதில் குறிப்பாக வாரிசு படத்தை தொடர்ந்து மீண்டும் ஒரு தெலுங்கு இயக்குனருடன் இணைந்து விஜய் பணியாற்ற உள்ளார் என்றும் ஒரு தகவல் வெளியானது.
தெலுங்கில் ரவி தேஜா நடித்த கிராக், சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற பாலகிருஷ்ணாவின் வீரசிம்ஹா ரெட்டி ஆகிய படங்களை இயக்கிய கோபிசந்த் மாலினேனி தான் விஜய் படத்தை இயக்கப் போகிறார் என ஒரு தகவல் கடந்த சில நாட்களாகவே ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தநிலையில் அவர் விஜய் படத்தை இயக்குவதற்கு மிகப்பெரிய அளவில் வாய்ப்பு இருக்கிறது என்பதை அவரே உறுதிப்படுத்தும் விதமாக ஒரு காரியம் செய்துள்ளார்.
சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கணக்கை நடிகர் விஜய் துவங்கினார். தற்போது கோபிசந்த் மாலினேனி விஜய்யின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின் தொடர ஆரம்பித்திருக்கிறார். இதிலிருந்து அவர் விஜய் படத்தை இயக்குவதை மறைமுகமாக உறுதி செய்து விட்டார் என்றே திரையுலக வட்டாரத்தில் பேசப்படுகிறது.