கிங்டம் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | சாய் பல்லவியின் முதல் ஹிந்தி படம் நவ., 7ல் ரிலீஸ் | நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின் | பழம்பெரும் தெலுங்கு சினிமா பாடலாசிரியர் சிவசக்தி தத்தா மறைவு: இவர் இசையமைப்பாளர் கீரவாணியின் தந்தை | அடுத்த ஆண்டு ‛ராட்சசன் 2' : விஷ்ணு விஷால் கொடுத்த அப்டேட் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தை வாழ்த்திய ராஷ்மிகா | ஹரிஹர வீரமல்லு படத்தின் தமிழக உரிமை விற்பனை | ராமின் பறந்துபோ படத்தை பாராட்டிய நயன்தாரா | ‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் |
துணிவு படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த சமயத்திலேயே நடிகர் அஜித் தனது நண்பர்கள் கூட்டணியுடன் பைக்கில் கிட்டத்தட்ட 1000 கிலோ மீட்டர்களுக்கு மேல் சுற்றுப்பயணம் செய்து வந்தார். அதைத்தொடர்ந்து அடுத்ததாக அவரது சுற்றுப்பயணத் திட்டம் குறித்த ஒரு வரைபடமும் கூட வெளியானது. இந்த நிலையில் தற்போது அஜித் மீண்டும் தனது பைக் சுற்று பயணத்தை துவங்கியுள்ளார். கார்கில், லடாக், ஜம்மு, ஸ்ரீநக,ர் மணாலி, ரிஷிகேஷ் மற்றும் ஹரித்துவார் உள்ளிட்ட பகுதிகள் வழியாக அவரது சுற்றுப்பயணம் நடைபெற இருக்கிறது.
இந்த நிலையில் நேபாளத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அஜித் அங்கே உள்ள ஒரு ஹோட்டலுக்கு சென்றபோது, சிறிது நேரம் ஒரு செப் ஆக மாறி தனது கைப்பக்குவத்தை காட்டி அசத்தினார். இதற்காக அந்த ஹோட்டல் சமையல் கலைஞர்கள் அணியும் பிரத்யேக உடையை அணிந்து கொண்டு இவர் உணவு தயாரிக்கும் வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.