மாமன் பட டிரைலர் : ஐஸ்வர்யா லட்சுமிக்கு ஏற்பட்ட பயம் | பாலிவுட்டில் கூடுதல் கவனம் செலுத்தும் ஸ்ரீலீலா | ஆபரேஷன் சிந்தூர் - பிரபலங்களுக்கு எச்சரிக்கை விடுத்த பவன் கல்யாண் | கவுதம் மேனன் இயக்கத்தில் சந்தானம்? | ரெட்ரோ படத்திற்கு பின் கார்த்திக் சுப்பராஜின் அடுத்த படம் பற்றிய அப்டேட் | படக்குழுவுக்கு இரண்டாவது முறையாக பிரேக் கொடுத்த ராஜமவுலி | தயாரிப்பாளராக உருவெடுத்தது ஏன்? : சமந்தா வெளியிட்ட தகவல | 6 ஆண்டுகளுக்குப் பிறகு தெலுங்கில் கோவை சரளா | மும்பையில் அமீர்கானை சந்தித்த அல்லு அர்ஜுன் | 'ஆபரேஷன் சிந்தூர்' : சினிமா பிரபலங்கள் வாழ்த்தும், பாராட்டும் |
நடிகர் விஜய் தற்போது வினோத் இயக்கத்தில் தனது கடைசி படம் என்று அறிவிக்கப்பட்ட ஜனநாயகன் படத்தில் முழு வீச்சில் நடித்து வருகிறார். தனது அரசியல் கட்சி துவக்கத்தை இவர் வெளியிட்டபோதே வெங்கட் பிரபு இயக்கத்தில கோட் படத்தில் நடிக்க வந்தார். அந்த சமயத்திலேயே, தான் அடுத்து ஒரு படம் நடிக்க இருப்பதாகவும் அதுதான் தனது கடைசி படம் என்றும் அவர் கூறியபோது விஜய் நடிக்கும் கடைசி படத்தை இயக்கப் போகும் வாய்ப்பு யாருக்கு கிடைக்கும் என்று பல யூகங்கள் வெளியாகி வந்தன. கடைசியாக அந்த வாய்ப்பு அஜித்தின் ஆஸ்தான இயக்குனரான வினோத்திற்கு சென்று விட்டது..
அதே சமயம் விஜய்யின் கடைசி படத்தை இயக்குவதற்காக பேச்சுவார்த்தை நடத்தி கிட்டத்தட்ட உறுதியான நிலையில் அது கைவிடப்பட்டது என்று சமீபத்தில் பிரபல தெலுங்கு இயக்குனர் கோபிசந்த மாலினேனி கூறியுள்ளார். விஜய் ஏற்கனவே தெலுங்கு இயக்குனரான வம்சி பைடிப்பள்ளி என்பவர் இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்திருந்தார். அந்த வகையில் கோபிசந்த் மாலினேனி, நடிகர் பாலகிருஷ்ணாவை வைத்து இயக்கிய வீரசிம்ஹா ரெட்டி திரைப்படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து விஜய்யிடம் இருந்து தனக்கு அழைப்பு வந்ததாகவும் விஜய்யை சந்தித்து தான் சொன்ன கதை அவருக்கு பிடித்திருந்ததாகவும் அதுதான் தனது கடைசி படம் என்று விஜய் கூறியதாகவும் அந்த பேட்டியில் கூறியுள்ளார் கோபிசந்த மாலினேனி.
ஆனால் அதன் பிறகு அந்த வாய்ப்பு எப்படி கைநழுவிப் போனது என்பது குறித்து அவர் கூறும்போது, “விஜய் அரசியல் கட்சியை அறிவித்ததால் அவரது கடைசி படத்தை ஒரு தெலுங்கு பட இயக்குனர் இயக்கினால் அது அவரது அரசியல் பயணத்தில் தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கும் என்று கூறி அவரை சுற்றியுள்ளவர்கள் அவருக்கு அழுத்தம் கொடுத்தனர். ஆனால் அரசியலில் அதையும் பார்க்க வேண்டும் அல்லவா? அதனால் தான், நான் விஜய்யை வைத்து படம் இயக்கும் பேச்சுவார்த்தை அத்துடன் நின்றுவிட்டது. அதன்பிறகு தான் வினோத் டைரக்சனில் விஜய் நடிப்பதாக அறிவிப்பு வெளியானது” என்று கூறியுள்ளார்.