ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் | ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் | சூர்யாவுடன் நடிப்பது வாழ்நாள் கனவு: மீனாட்சி தினேஷ் | 'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள் : 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன ? | பிளாஷ்பேக்: ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராஜேஷ் | பிளாஷ்பேக்: 40 வயது மூத்தவருக்கு ஜோடி: இதிலும் சாதனை படைத்த ஸ்ரீதேவி | 25 ஆண்டுகளுக்கு பிறகு மகனுடன் இணைந்து நடிக்கும் ஜெயராம் |
இயக்குனர் மிஷ்கின் தன்னுடைய பட விழாக்களில் மட்டுமல்ல, தான் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் விழாக்களிலும் கூட சர்ச்சையாக பேசி பார்வையாளர்களின் கவனத்தை திருப்புவதை ஒரு வாடிக்கையாகவே செய்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்ற டைனோசர்ஸ் என்கிற படத்தில் இசை வெளியீட்டு விழா நிகழ்வில் கலந்து கொண்டார் மிஷ்கின். இந்த படத்தை எம்.ஆர் மாதவன் என்பவர் இயக்கியுள்ளார்.
இந்த நிகழ்வில் மிஷ்கின் பேசும்போது, “இயக்குனர் மாதவன் தன்னை இந்த விழாவிற்காக அழைக்க வந்தபோது அவரது முகத்தை பார்த்ததுமே அவர் அதிகமாக சிகரெட் பிடிப்பார் என்பது தெரிந்தது. என்னுடைய முதல் படத்தின் போது நான் தினசரி 100 சிகரெட் பிடித்தேன். அஞ்சாதே படம் எடுத்தபோது தினசரி 120 சிகரெட் பிடித்தேன். அந்த அளவுக்கு டென்ஷனை குறைக்க சிகரெட் உதவியது. ஒரு இயக்குனர் அதிகம் சிகரெட் பிடிக்கிறார் என்றாலே அந்த படம் ஹிட் தான். அந்த வகையில் இந்த படமும் நிச்சயம் ஹிட் ஆகும்” என்று பேசினார்.
அதுமட்டுமல்ல தனது பேச்சை முடிக்கும் சமயத்தில், 'மணி பத்து ஆகிவிட்டது எல்லோரும் வீட்டுக்கு போங்க.. தண்ணி அடிங்க.. தம் அடிங்க.. தூங்குங்க” என்றும் கூறினார்.
புகைபிடிக்கும் பழக்கத்தை கைவிட வேண்டும் என்று கூறி ஒரு திரைப்படத்தின் துவக்கத்திலேயே விழிப்புணர்வு அறிவிப்புடன் தான் படத்தை துவங்குகிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு பொறுப்பான இயக்குனரான மிஸ்கின் இதுபோன்று ஒரு தவறான முன்னுதாரணமான பேச்சை பொதுவெளியில் பேசியது தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. சோசியல் மீடியாவில் இது குறித்த விவாதங்களும் தற்போது அனல் பறக்கின்றன.