நானி படத்துக்காக பிரமாண்ட குடிசை செட் | 8 வருடங்களுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் லாவண்யா | பிளாஷ்பேக் : விமர்சனம் மீது தொடரப்பட்ட முதல் வழக்கு | பிளாஷ்பேக்: ஒரே தீபாவளியில் வெற்றி, தோல்வியை சந்தித்த சிவகுமார் | தமிழில் 'ட்ரான்' 3ம் பாகம்: நாளை வெளியாகிறது | நாஞ்சில் விஜயன் மீது திருநங்கை பாலியல் புகார் | 'கருடன்' ரீமேக் தோல்வி ஏன் ? நாயகன் விளக்கம் | தெலுங்கில் வரவேற்பைப் பெறும் சிறிய படம் 'லிட்டில் ஹார்ட்ஸ்' | பிளாஷ்பேக்: ஆற்றல்மிகு திரைக்கலைஞர்களை அலைபோல் அறிமுகமாக்கிச் சென்ற “அலைகள் ஓய்வதில்லை” | எனக்கு நீதி வாங்கித் தாங்க : மாதம்பட்டி ரங்கராஜ் பற்றி முதல்வரிடம் முறையிட்ட ஜாய் கிரிஸ்டலா |
முதன்முறையாக விஷால் 'வில்லன்' என்கிற மலையாள படத்தில் நடித்துள்ளார் என்பதை விட அவர் அந்தப்படத்தில் மோகன்லாலுக்கு வில்லனாக நடித்திருக்கிறார் என்கிற செய்தி தான் ஆச்சர்யமாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் படத்தின் இயக்குனர் பி.உன்னிகிருஷ்ணனோ, இவர்கள் இருவரில் யார் வில்லன் என்பதை படம் பார்க்கும் நீங்கள் தான் முடிவு பண்ணவேண்டும் என கைகாட்கிறார். அதுமட்டுமல்ல, இந்தப்படத்தில் விஷாலுக்கு முன்னதாக இந்த கேரக்டரில் பிருத்விராஜ் நடிக்க இருந்தார் என்கிற புது தகவலையும் கூறியுள்ளார்.
சமீபத்தில் இந்தப்படம் குறித்து சில தகவல்களை சேனல் ஒன்றில் பகிர்ந்துகொண்ட இயக்குனர் பி.உன்னிகிருஷ்ணன், விஷாலுக்கு முன் இந்த கேரக்டரில் பிருத்விராஜ் நடித்தால் நன்றாக இருக்கும் என அவரை அணுகியதாக கூறினார். பிருத்விராஜுக்கு இந்த கேரக்டரில் நடிக்க எந்த தயக்கமும் இல்லையென்றாலும், அவரது கால்ஷீட் தொடர்ந்து டைட்டாக இருந்தால் அவரால் நடிக்க முடியாமல் போனதாம். இந்த கேரக்டரில் மிகப்பெரிய நடிகர் ஒருவர் நடித்தால் தான் நிறைவாக இருக்கும் என பிருத்விராஜ் கூறியபடியே, இந்த கேரக்டரில் விஷாலை நடிக்க வைத்துள்ளோம் என கூறியுள்ளார் இயக்குனர் உன்னிகிருஷ்ணன்.