மீண்டும் விளையாட்டு படத்தை கையில் எடுக்கும் அருண் ராஜா காமராஜ் | ஹிந்தி நடிகர் சதீஷ் ஷா காலமானார் | தனுஷ் தம்பியாக நடிக்க வேண்டியது : விஷ்ணு விஷால் | பிரபாஸ் படத்தில் இணைந்த இளம் நடிகை | ரஜினிகாந்த் எடுத்த புது முடிவு? | எனக்கு ஆர்வம் இல்லை : லியோ படப்பிடிப்பில் மகன் நடிகரிடம் திரிஷா சொன்ன வார்த்தை | பவர்புல்லான சவுண்ட் ஸ்டோரி : விவேக் ஓபராய் | கார் மோதி 3 பேர் விபத்தில் சிக்கிய விவகாரம் : விளக்கம் கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை | அரசு மருத்துவமனை பின்னணியில் உருவாகும் 'பல்ஸ்' | ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய லட்சுமி மேனன் மனுதாக்கல் |

ராஜமவுலி இயக்கத்தில், பிரபாஸ், ராணா டகுபட்டி, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த 'பாகுபலி 1, 2' படங்கள் இந்திய அளவில் பெரும் வரவேற்பைப் பெற்ற படங்கள். 'பாகுபலி 2' படம் 1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை புரிந்தது.
அந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்த 'ராஜமாதா' கதாபாத்திரத்தில் ஸ்ரீதேவி நடிக்க வேண்டியது. அவரிடம் கதை சொன்ன பிறகு சில பல காரணங்களால் அவரை நடிக்க வைக்கவில்லை. அதன்பின் அது குறித்து சில சர்ச்சைகள் வெளிவந்தன. ஸ்ரீதேவி அவரகு குழுவினருக்காக ஒரு ஹோட்டலின் தளத்தையே கேட்டார் என்றெல்லாம் சொன்னார்கள்.
ஆனால், ஸ்ரீதேவியின் கணவரும் தயாரிப்பாளருமான போனி கபூர் இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படையாகப் பேசியுள்ளார். “பாகுபலி' படத் தயாரிப்பாளர்கள் தான் இந்த விவகாரத்தில் குற்றவாளிகள். அதை அவர்களின் முகத்திற்கு நேராகவே சொல்லுவேன். ஸ்ரீதேவிக்கு 'இங்கிலீஷ் விங்கிலீஷ்' படத்தின் சம்பளத்தை விட குறைவான சம்பளத்தைக் கொடுப்பதாகத் தயாரிப்பாளர்கள் சொன்னார்கள். அவர் வாய்ப்புக்காகப் போராடிக் கொண்டிருக்கும் நடிகை அல்ல. அவருக்குரிய மரியாதையைக் கொடுக்கவில்லை என்றால் அவர் ஏன் அதில் நடிக்க வேண்டும். அதற்கு நான் சாட்சி.
படத்திற்காக நீண்ட நாட்கள் நடிக்க வேண்டி இருந்தது. அப்போது குழந்தைகளுக்கும் விடுமுறை நாட்கள். நான் அவர்களுக்கான ரூம் செலவுகளை கொடுக்கப் போகிறேன். ஆனால், ராஜமவுலியிடம் தயாரிப்பாளர்கள் தவறான தகவலைத் தந்துள்ளார்கள்,” என்று கடுமையாகப் பேசியுள்ளார்.