‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்! | ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை! | விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணி.. படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் ‛தோசை கிங்' படத்திற்காக மோகன்லால் உடன் பேச்சுவார்த்தை நடத்தும் தா.சே. ஞானவேல்! | த்ரிவிக்ரம், வெங்கடேஷ் படத்தில் இணையும் இளம் நாயகி! | புஷ்பா இன்டர்நேஷனல்.. நான் லோக்கல் ; பிரித்விராஜ் பஞ்ச் | அடுத்தடுத்து 100 கோடி வசூல் படங்கள் ; உற்சாகத்தில் பிரேமலு ஹீரோ | ‛லோகா சாப்டர் 1 ; சந்திரா' படத்துக்கு பிரியங்கா சோப்ரா பாராட்டு | நடிகர் சங்க தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை ? நடிகை ஊர்வசி விளக்கம் | 100வது படத்துடன் ஓய்வு பெறுகிறேனா ? இயக்குனர் பிரியதர்ஷன் தெளிவான பதில் |
மலையாள திரை உலகில் தற்போது வளர்ந்து வரும் இளம் கதாநாயகனாக ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருபவர் நடிகர் நஸ்லேன். கடந்த 2019ல் வெளியான ‛தண்ணீர் மாத்தன் தினங்கள்' படத்தில் அறிமுகமான இவர், அதன்பிறகு சிறிதும் பெரிதுமான கதாபாத்திரங்களில நடித்து வந்தாலும் கூட, கடந்த வருடம் வெளியான ‛பிரேமலு' படத்தில் கதாநாயகனாக அறிமுகமானதன் மூலம் தான் மிகப்பெரிய வெற்றியை முதன்முதலாக ருசித்தார். அந்த படம் 100 கோடிக்கு மேல் வசூலித்தது.
வளர்ந்து வரும் ஒரு இளம் ஹீரோவுக்கு அதுவும் மலையாள திரையுலகில் இது மிகப்பெரிய சாதனை என்று சொல்லலாம். அதனைத் தொடர்ந்து இந்த வருட துவக்கத்தில் நஸ்லேன் கதாநாயகனாக நடித்து வெளியான ‛ஆலப்புழா ஜிம்கானா' திரைப்படமும் நல்ல வரவேற்பு பெற்று 65 கோடி வரை வசூலித்தது. இந்த நிலையில் சமீபத்தில் வெளியாகியுள்ள ‛லோகா சாப்டர் 1 ; சந்திரா' படத்தில் நஸ்லேன் கதாநாயகன் நடித்துள்ளார். இந்த படமும் வெளியான 8 நாட்களில் நூறு கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. அந்த வகையில் இளம் ஹீரோவாக நஸ்லேன் அடுத்தடுத்து 100 கோடி வசூல் படங்களில் பங்கு பெற்றிருப்பதால் அவரை தேடி பட வாய்ப்புகள் குவிக்கின்றனவாம்.
ஆனால் இதில் என்ன கவனிக்க வேண்டிய விஷயம் என்றால், இவரது பிரேமலு படத்தில் அதிகம் கவனம் ஈர்த்தது அதில் கதாநாயகியாக நடித்த மமிதா பைஜூக்காகத்தான். அதே போல இப்போது லோகா படமும் கதாநாயகி கல்யாணி பிரியதர்ஷனுக்காக தான் ரசிகர்களை கவர்ந்துள்ளது. தனக்காக படம் ஓடுகிறதோ இல்லையோ, ஓடுகின்ற படத்தில் தான் இருக்கிறோம் என்பது கூட வளர்ந்து வரும் ஒரு இளம் ஹீரோவுக்கு ஒரு பெருமை தானே.