பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

கடந்த வருடம் மலையாளத்தில் வெளியான 'பிரேமலு' படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை மமிதா பைஜூ. இதைத் தொடர்ந்து தமிழில் தற்போது விஜய், சூர்யா ஆகியோரின் படங்களில் நடித்து வருகிறார். பிரதீப் ரங்கநாதனுடன் இவர் இணைந்து நடித்துள்ள 'டியூட்' திரைப்படம் தற்போது வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் சமீபத்திய 'டியூட்' புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட இவரிடம், 'பிரேமலு 2' படத்தில் நடிக்கிறீர்களா என்று கேட்கப்பட்டதுடன் மிகப்பெரிய வெற்றி பெற்ற லோகா படத்தின் அடுத்த பாகத்தில் நீங்கள் நடிப்பதாக சொல்லப்படுகிறதே என்ற கேள்வியை செய்தியாளர்கள் எழுப்பினார்கள்.
இதற்கு பதில் அளித்த மமிதா பைஜூ, “லோகா படத்தின் அடுத்த பாகங்களில் நான் நடிப்பது குறித்த தகவல்கள் எதுவும் இப்போது உறுதி இல்லை. அதே சமயத்தில் வரும் பாகங்களில் எனக்கு ஒரு கதாபாத்திரம் இருந்தாலும் இருக்கலாம். ஆனால் அதில் நடிப்பதற்கு நான் விரும்புகிறேன்'' என்று கூறினார்.
அதேசமயம் அவர் நடித்த வெற்றி படமான பிரேமலு படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட இருக்கிறதா என்றும் அதிலும் தான் கதாநாயகியாக நடிக்க இருக்கிறேனா என்பது குறித்து இன்னும் படத்தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து தனக்கு அதிகாரப்பூர்வமான தகவல் வரவில்லை என்றும் கூறியுள்ளார் மமிதா பைஜூ.