வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கிறாரா? | மகுடம் படத்தின் அப்டேட் தந்த விஷால் | பராசக்தி படத்திற்காக சிறப்பு கண்காட்சி | ரஜினி பிறந்தநாளில் “படையப்பா” ரிட்டர்ன்ஸ் | இண்டிகோ விவகாரத்தில் விமான ஊழியர்களை திட்டாதீர்கள் : சோனு சூட் ஆதரவு குரல் | பிரித்விராஜூக்கு தாத்தாவாக நடிக்கும் மோகன்லால் | ஜப்பானில் ரசிகர்களுடன் பாகுபலி தி எபிக் படத்தை பார்த்து ரசித்த பிரபாஸ் | வருட இறுதியில் நிவின்பாலிக்கு டபுள் ஜாக்பாட் | பார்த்தால் பசிதீரும், ஒரு அடார் லவ், சிவாஜி : ஞாயிறு திரைப்படங்கள் |

ஹிந்தியில் மோகித் சூரி இயக்கத்தில் கடந்த ஜூலை 18ம் தேதி திரைக்கு வந்த படம் ‛சாயாரா'. அஹான் பாண்டே, அனிட் பட்டா நடிப்பில் உருவான இந்த படத்தை யஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இந்த படம் 50 நாட்களை கடந்து தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும், 50 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் இதுவரை 576 கோடி வசூலித்துள்ளது. இந்த ஆண்டில் வெளியான காதல் படங்களில் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் முதலிடத்தை பிடித்திருக்கிறது.
இந்நிலையில் இந்த சாயாரா படத்தை வருகிற செப்டம்பர் 12ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள். குறிப்பாக ஆங்கில வசனங்களுடன் ஹிந்தியில் இப்படம் வெளியாகிறது என்றும் தெரிவிக்கப்படுகிறது.