நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் | வாகா எல்லையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி | பின்னணி குரல் கொடுத்துவிட்டு கண்கலங்கிய எம்.எஸ்.பாஸ்கர் | 3 பட வெற்றி விழாவுக்காக தயாராகும் படக்குழுவினர் | வெற்றியை தேடி ஓடாதீங்க... திறமையை மேம்படுத்துங்க : மனோஜ் பாஜ்பாய் | ‛சிங் கீதம்' படம் என் 40 ஆண்டு கனவு : இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ் | ரஜினி, சிம்பு, பிரதீப்... : 3 படங்கள் வைத்திருக்கும் அஷ்வத் மாரிமுத்து | நோவா படத்தில் ஆக் ஷனில் ரைசா வில்சன் |

வட இந்தியாவில் பிறந்தாலும் தென்னிந்திய சினிமாவில் நடித்து வருகிறவர் லாவண்யா திரிபாதி. 'அந்தாள ராட்சசி' மூலம் தெலுங்கில் அறிமுகமான இவர் சசிகுமார் ஜோடியாக 'பிரம்மன்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் 'மாயவன்' படத்தில் நடித்தார். தெலுங்கில் மட்டும் கவனம் செலுத்தி வந்த லாவாண்யா, தெலுங்கு நடிகர் வருண் தேஜை 2023ல் திருமணம் செய்தார். தற்போது அதர்வாவுடன் நடித்துள்ள 'தணல்' படத்தில் மூலம் 8 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் திரைக்கு வருகிறார்.
அன்னை பிலில் புரொடக்சன் தயாரிப்பில் எம். ஜான் பீட்டர் இந்த படத்தை தயாரித்துள்ளார். ரவீந்திர மாதவா இயக்கி உள்ளார். ஷாரா, பாரத், லட்சுமி பிரியா மற்றும் அழகம் பெருமாள் ஆகியோர் நடித்துள்ளனர். சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைத்துள்ளார்.
படம் குறித்து இயக்குநர் ரவீந்திர மாதவா கூறும்போது, "நிறைய ஆக்ஷன் மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் உணர்வுப்பூர்வமான கதையாக 'தணல்' இருக்கும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தங்கள் கொள்கைகளை விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லாத இரண்டு நபர்களைப் பற்றிய கதை இது. வாழ்நாள் முழுவதும் துன்பப்பட்டு, பழிவாங்கும் கோபத்தில் இருக்கும் முன்னாள் ராணுவ வீரர் மற்றும் வேதனையான கடந்த காலத்தைக் கொண்ட ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் இவர்களை சுற்றி கதை இருக்கும்" என்றார்.