தீனா படத்திற்கு பிறகு மதராஸி படத்தில் வேண்டுதலை நிறைவேற்றிய ஏ.ஆர்.முருகதாஸ் | சிரஞ்சீவி - நயன்தாரா படக்குழுவை சந்தித்த விஜய் சேதுபதி படக்குழு | ஐஸ்வர்யா ராயை தொடர்ந்து அபிஷேக் பச்சன் வழக்கு: புகைப்படத்தை பயன்படுத்த தடை கோரி மனு | மகளின் முதல் பிறந்தநாளை கொண்டாடிய ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே | என் அழகான ஜென்டில்மேன் நடிகரே : ரவி மோகனை வாழ்த்திய சுதா கெங்கரா! | நயன்தாரா ஆவணப்படம் வழக்கு : பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு | 2 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகியுள்ள மிடில் கிளாஸ் | அஜித் 64 படத்தை குறித்து புதிய தகவல் இதோ | மகுடம் பட பிரச்சனையை சுமூகமாக தீர்த்த விஷால் | சசி, விஜய் ஆண்டனி படத்தலைப்பு நூறுசாமி |
ஸ்ரீகாந்த் ஓடேலா இயக்கத்தில் நானி நடிக்கும் படம் 'தி பாரடைஸ்'. அனிருத் இசையமைக்கிறார். தமிழ், ஹிந்தி, தெலுங்கு, தமிழ், ஆங்கிலம், ஸ்பானிஷ், வங்காளம், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய 8 மொழிகளில் அடுத்த ஆண்டு மார்ச் 26ல் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்துக்காக ஐதராபாத்தில் மிகப்பெரிய “குடிசைப்பகுதி” செட் அமைத்து இருக்கிறார்கள்.
30 ஏக்கர் பரப்பளவில், இதுவரை இந்திய சினிமா வரலாற்றிலேயே அமைக்கப்படாத மிகப்பெரிய குடிசை பகுதியை பல தொழில்நுட்ப வல்லுனர்கள் துணையுடன் உருவாக்கி இருக்கிறார்கள்.. பாகுபலி படத்தில் வரும் மகிழ்மதி பேரரசை போல், இங்கு குடிசைப்பகுதி பேரரசு உருவாக்கப்படுகிறது. கதாநாயகன் குடிசைப்பகுதியில் பிறந்து அங்கேயே வளர்ந்து, பின்னர் உச்சத்துக்குச் செல்வதாக கதை நகர்வதால் 'ஸ்லம்ஸ்களின் பாகுபலி' மாதிரி செட்டை வடிவமைத்து இருக்கிறார்களாம்.
நானி, கீர்த்தி சுரேஷ் நடித்த 'தசரா' படத்தை இயக்கியவர் ஸ்ரீகாந்த் ஓடேலா. தெலுங்கில் பிரபல ஹீரோவாக இருந்தாலும், நானியால் தமிழ் மார்க்கெட்டை பிடிக்க முடியவில்லை. தனது படங்களை தமிழில் ரிலீஸ் செய்கிறார். சென்னையில் நடக்கும் பட புரமோஷன்களில் கலந்துகொள்கிறார். ஆனாலும், தமிழில் நானிக்கு வெற்றி கிடைக்கவில்லை. தி பாரடைஸ் படத்திலாவது அதிர்ஷ்டம் அடிக்குமா என்பது அடுத்த ஆண்டு தெரிய வரும்.