'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
டோலிவுட்டின் யங் டைகர் ஜூனியர் என்.டி.ஆர், ஜனதா கேரேஜ் படத்தின் வெற்றிக்கு பின்னர் தனது சகோதரரும் நடிகருமான கல்யாண் ராமின் சொந்த தயாரிப்பில் உருவாகும் திரைப்படத்தில் நடிப்பதாக ஏற்கனவே கூறப்பட்டது. இப்படத்தை இயக்க இயக்குனர்கள் வம்சி, பூரி ஜெகன்நாத் போன்ற பெயர்கள் அடிபட்ட நிலையில், தற்போது இயக்குனர் பாபி, ஜூனியர் என்.டி.ஆரின் 27வது படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதனை கல்யாண் ராம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஜூனியர் என்.டி.ஆரின் 27வது படத்தை இயக்குனர் பாபி இயக்கத்தில் என்.டி.ஆர் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் தான் தயாரிக்கவுள்ளதாக கல்யாண் ராம் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் ஐ.எஸ்.எம் படத்தில் நடித்த கல்யாண் ராம் அப்படத்தைத் தொடர்ந்து தயாரிப்பு பணிகளில் இறங்கிவிட்டார். பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் வெளிவந்த சர்தார் கபார் சிங் திரைப்படத்தை இயக்குனர் பாபி அண்மையில் இயக்கினார். அப்படத்திற்கு பின்னர் ஜூனியர் என்.டி.ஆருக்காக மீண்டும் ஆக்ஷன் கதையை பாபி தேர்வு செய்துள்ளதாகக் கூறப்படுகின்றது.