ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
சர்ச்சைகளுக்கு பெயர்போன இயக்குனர் ராம் கோபால் வர்மா, இயக்கத்தில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் 'சிவா டு வங்கவீட்டி'. சந்தீப் குமார், நைனா கங்குலி, வம்சி ஜகன்டி மற்றும் பலரது நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் டிசம்பர் 23ல் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, அண்மையில் நடைபெற்று பிரபலமடைந்துள்ள நிலையில் ஆர்ஜிவி இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து வருகின்றார்.
டிசம்பர் 20ல் ஐதராபத்தில் நடைபெறவிருக்கும் இந்நிகழ்ச்சியில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப், பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா, ரவி தேஜா, சார்மி, பிரபல தெலுங்கு இயக்குனர்கள் பூரி ஜெகன்நாத், ராஜமௌலி, கிருஷ்ண வம்சி உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளதாக ராம் கோபால் வர்மா அறிவித்துள்ளார். மேலும் பல்வேறு பாலிவுட் பிரபலங்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளதாகவும் விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகின்றது.