என்னைச் சுற்றி நல்ல ஆண்கள் இல்லை - அனுயா | இவை போதும் : இந்த உலகத்தையே மாற்றிவிடலாம் - சமந்தா | கருணாநிதி நூற்றாண்டு விழா தள்ளிவைப்பு | வாடிவாசல் படத்தில் சூர்யாவுக்கு பதில் அஜித்தா...! - உண்மை என்ன? | தர்ஷன், தர்ஷனா நடிக்கும் புதிய படம் | 'டாக்சிக்' - ரிலீஸ் தேதியுடன் வெளியான யஷ் அடுத்த பட அறிவிப்பு | தனுஷ் இயக்கும் படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ் | மம்முட்டிக்கு பதிலாக ஜாக்கி ஷெரப் | டெவில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பாலகிருஷ்ணா 109வது படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகை |
பாலிவுட் இயக்குனர் ராம்கோபால் வர்மா ஒருவரை பற்றி கமெண்ட் அடிக்கிறார் என்றாலே அது கிண்டலாகத்தான் இருக்கும்.. ஆனால் தெலுங்கு இளம் நடிகர் விஜய் தேவரகொண்டா பற்றி பார்த்தும் விதமாக அவர் கமென்ட் கூறியுள்ளது பலரையும் ஆச்சர்யப்படுத்தி உள்ளது. தெலுங்கில் முன்னணி இயக்குனர்களின் சாய்ஸாக இருக்கும் விஜய் தேவரகொண்டா, தற்போது பூரி ஜெகன்நாத் டைரக்சனில் இந்தியில் உருவாகும் 'லிகர்' என்கிற படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப்படத்தின் சில காட்சிகளை சமீபத்தில் பார்த்துள்ளார் ராம்கோபால் வர்மா. இதனையடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் “லயனும் டைகரும் இணைந்து லைகர் என புதிய உருவம் கிடைத்தது போல பவன் கல்யாண், மகேஷ்பாபு, ரவிதேஜா மற்றும் டைகர் ஷெராப் ஆகியோரின் கலவையாக விஜய் தேவரகொண்டா இருக்கிறார். கடந்த இருபது வருடங்களில் நான் பார்த்த ஹீரோக்களை விட அவரது ஸ்கிரீன் பிரசன்ஸ் சூப்பராகவே இருக்கிறது.” என குறிப்பிட்டு பாராட்டியுள்ளார்.