நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் |
தவமாய் தவமிருந்து படத்தில் சேரனின் ஜோடியாக தமிழில் அறிமுகமானவர் பத்மப்ரியா. அடுத்து சத்தம் போடாதே, மிருகம் உள்ளிட்ட படங்களில் நடித்தவருக்கு தமிழில் பெரிதாக வாய்ப்புகள் வரவில்லை.. அதேசமயம் மலையாள திரையுலகில் பிஸியான நடிகையாக வலம் வந்தார். ஆனால் திருமணம் செய்துகொண்ட பின் வாய்ப்புகள் குறைந்தது. மேலும் மீடூ தொடர்பான விவகாரத்தில் நடிகர் சங்கத்துடன் குறிப்பாக மோகன்லாலுடன் மோதல் போக்கை கடைபிடித்ததால் சுத்தமாக பட வாய்ப்பே இல்லாமல் போனது.
இந்தநிலையில் தான் தமிழில் ரீ என்ட்ரி கொடுக்கும் விதமாக விக்ரமின் கோப்ரா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் பத்மப்ரியா.. தற்போது மலையாளத்திலும் பிஜுமேனன் கதாநாயகனாக நடிக்கும் 'ஒரு தெக்கன் தள்ளு கேஸ்' என்கிற படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமாகி இருக்கிறார் பத்மப்ரியா. இது எழுத்தாளர் இந்துகொபன் எழுதிய 'அம்மினிப்பிள்ள வெட்டு கேஸ்' என்கிற நாவலை தழுவி உருவாகிறது. தற்போது மோகன்லால் நடிக்கும் ப்ரோ டாடி படத்தின் கதாசிரியரான ஸ்ரீஜித், இந்தப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.