பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் | அருண் விஜய் படத்திற்கு பாடல் பாடிய தனுஷ் | அமெரிக்காவில் ஏப்., 9ல் குட் பேட் அக்லி பிரீமியர் காட்சி | முதல் கடார் என் சினிமாவை மூடியது... இண்டாவது கடார் திறந்து வைத்தது : சன்னி தியோல் | அண்ணன் கடனை என்னால் அடைக்க முடியாது: கோர்டில் நடிகர் பிரபு தகவல் | பிளாஷ்பேக்: சமகாலத்தில் எடுக்கப்பட்டு சாதனையையும், வேதனையையும் சந்தித்த இரண்டு “ஞானசௌந்தரி”கள் | 'ரெட்ரோ' டப்பிங் பணிகளை நிறைவு செய்த சூர்யா |
நடிகர் ரஜினிகாந்துக்கு 2 மகள்கள். ஐஸ்வர்யா நடிகர் தனுசை திருமணம் செய்துள்ளார். அவர்களுக்கு லிங்கா, யாத்ரா என 2 மகன்கள். இரண்டாவது மகள் சௌந்தர்யாவின் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தது. சவுந்தர்யாவுக்கும், தொழிலதிபர் விசாகனுக்கும் கடந்த 2019ம் ஆண்டு திருமணம் நடந்தது.
சென்னை கடற்கரை சாலையிலுள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் நடந்த இத்திருமணத்தில் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்களும், சினிமா பிரபலங்களும் கலந்து கொண்டனர்.
இவர்களுக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது சவுந்தர்யா கர்ப்பமாகி இருக்கிறார். இதையடுத்து, மீண்டும் ரஜினிகாந்த் தாத்தா ஆனதை அவருக்கு சர்ப்ரைசாக கூறி மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். இந்த செய்தி அறிந்ததில் இருந்து ரஜினி மிகவும் உற்சாகமாக உள்ளார். சவுந்தர்யாவுக்கு ஏற்கெனவே 5 வயதில் வேத் எனும் மகன் இருப்பது குறிப்பிடத்தக்கது.