இறுதிக்கட்டத்தில் 'கேர்ள் பிரண்ட்' : முதல் பாடல் வெளியீடு | புதுமுகங்களின் 'தி கிளப்' | பிளாஷ் பேக்: தயாரிப்பாளர் ஆன எஸ்.எஸ்.சந்திரன் | பிளாஷ்பேக்: மலையாளத்தின் முதல் சூப்பர் ஸ்டார் | விக்ரம், பிரேம்குமார் கூட்டணி உருவானது எப்படி | ரஜினி, கமல் இணைவார்களா? : காலம் கனியுமா? | காளிதாஸ் 2 வில் போலீசாக நடித்த பவானிஸ்ரீ | 2040ல் நடக்கும் ‛ரெட் பிளவர்' கதை | கவின் ஜோடியாக பிரியங்கா மோகன், கொஞ்சம் ஆச்சரியம்தான்… | குட் பேட் அக்லி : 'ஓஎஸ்டி' விரைவில் ரிலீஸ் |
மலையாள நடிகர் திலீப்பை அதிரடியாக மறுமணம் செய்துகொண்ட கையோடு ஹனிமூன் சென்று திரும்பிய காவ்யா மாதவன், சமீபத்தில் தான் தனது திருமணம் எப்படி நிகழ்ந்தது என்பது குறித்து மனம் திறந்துள்ளார். திலீப்பை திருமணம் செய்துகொள்ள தனக்கும் சில நியாயமான காரணங்கள் இருந்தன என்கிறார் காவ்யா மாதவன்.. குறிப்பாக தாங்கள் இருவரும் திருமணம் செய்யவேண்டும் என்பதில் மற்ற யாரையும் விட தங்களது ரசிகர்கள் தான் மிகவும் விருப்பம் கொண்டிருந்தார்கள் என்றும் கூறியுள்ளார் காவ்யா மாதவன்..
இதுநாள் வரை எங்களது மனதில் திருமணம் குறித்த எந்த எண்ணமும் இல்லாத நிலையில் ஊடகங்களும் சோஷியல் மீடியாவில் உள்ள பலரும் தான், அப்படி ஒரு தோற்றத்தை உண்டாக்கிவிட்டனர்.. மீண்டும் ஒரு திருமணம் குறித்து நான் ஆலோசித்தபோது அது எனக்கு உற்ற நண்பராக இருக்கும் திலீப்பாக இருக்க கூடாது என்கிற எண்ணமே சமீபத்தில் தான் வந்தது.. இந்த திருமணமே ஒரு வார காலத்திற்குள் பேசி முடிக்கப்பட்ட ஒன்றுதான்.. இதிலும் கூட ஜாதகம் எல்லாம் பார்த்து தான் நடத்தியுள்ளோம்..” என கூறியுள்ளார் காவ்யா மாதவன்