15 நாட்கள் கிடையாது.. 5 நாட்கள் தான் ; வா வாத்தியார் தயாரிப்பாளர் கெடுபிடி | நான் இப்போ சிங்கிள் : மூன்றாவது கணவரை பிரிந்த பிறகு நடிகை மீரா வாசுதேவன் அறிவிப்பு | கவுரவ ஆஸ்கர் விருது பெற்ற டாம் குரூஸ் | இரண்டு பாகங்களாக உருவாகும் பிரபாஸின் பவுஸி | வாரணாசி பட வில்லன் பிருத்விராஜ் ஹாலிவுட் பட பாதிப்பா? | விஜய்சேதுபதியா... துருவ் விக்ரமா... மணிரத்னம் சாய்ஸ் யார்? | விஷால் இயக்கி நடிக்கும் 'மகுடம்' படப்பிடிப்பு நிறைவு | ரஜினி படத்தை தனுஷ் இயக்குவாரா? | ப்ரண்ட்ஸ் ரீ ரிலீஸ் விழா : படக்குழு ஆப்சென்ட் | 'வாரணாசி' முன்னோட்ட வரவேற்பு: ராஜமவுலியின் நன்றி |

நானி நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த காதல் கதையம்சம் கொண்ட திரைப்படமான மஜ்னு வசூலில் லாபம் பார்த்து வருகின்றது. மஜ்னு படத்திற்கு முன்னர் நானி நடிப்பில் வெளிவந்த திரில்லர் திரைப்படம் ஜென்டில்மேன் படத்தின் வசூலைக் காட்டிலும் மஜ்னு படத்தின் முதல் வார வசூல் விநியோகஸ்தர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இயக்குனர் விரின்சி வர்மா இயக்கத்தில் அனு இமானுவேல், ப்ரியா ஸ்ரீ என இரு நாயகிகளுடன் நானி நடித்த மஜ்னு திரைப்படம் முதல் மூன்று நாட்களில் ரூ 15 கோடி வசூல் செய்துள்ளதாம். இதனால் தற்போது மஜ்னு படத்திற்கு தற்போது அதிக திரையரங்குகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாம். ஜென்டில்மேன் திரைப்படம் முதல் மூன்று நாட்களில் ரூ 8.7 கோடி வசூல் செய்திருந்தது. ஜென்டில்மேன் படத்தைக் காட்டிலும் விமர்சக ரீதியாக சறுக்கிய மஜ்னு, வசூலில் ஜென்டில்மேன் படத்தை காட்டிலும் மிஞ்சிவிட்டது.