ஆர்யாவிற்கு ஜோடியாகும் அனுபமா பரமேஸ்வரன்! | 'ஸ்பிரிட்' படத்தில் சிரஞ்சீவி? சந்தீப் ரெட்டி வங்காவின் பதில் இதோ! | கமல், ரஜினி இணையும் படம்: டிசம்பர் 12ல் அறிவிக்கப்படுமா? | எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை: ராஜமவுலி பேச்சால் புது சர்ச்சை | கதைநாயகன் ஆனார் மொட்டை ராஜேந்திரன்: தனது பிடிவாதத்தை தளர்ப்பாரா? | எங்கள் மண வாழ்க்கை ரகசியம் - 'சரிம்மா, சாரிம்மா': நடிகை ரோஜா | ஆஸ்கருக்கு செல்லும் 2 தமிழ் படங்கள் | 8 வருடங்களுக்கு பிறகு தமிழ் திரையில் ருஹானி சர்மா | தேர்தல் கமிஷன் தூதர் பதவியில் இருந்து நீது சந்திரா நீக்கம் | பிளாஷ்பேக்: பாலச்சந்திரமேனன் இயக்கிய தமிழ் படம் |

மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கடந்த 2013ல் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் 'திரிஷ்யம்'. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தென்னிந்திய மொழிகள் மற்றும் பாலிவுட் அதையும் தாண்டி சீன மொழியிலும் கூட இந்த படம் ரீமேக் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகமும் சில வருடங்கள் கழித்து வெளியானது. கொரோனா காலகட்டம் என்பதால் ஓடிடி.,யில் வெளியான இப்படத்திற்கு முதல் பாகத்திற்கு இணையான வரவேற்பு கிடைத்தது. தற்போது இந்த படத்தின் மூன்றாம் பாகம் தயாராகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது கேரளாவில் தொடுபுழாவில் நடைபெற்று வருகிறது.
இந்த படத்தின் கதாநாயகன் ஜார்ஜ் குட்டியாக நடித்துள்ள மோகன்லால், மனைவி மீனா, மகள்கள் அன்சிபா ஹாசன், எஸ்தர் அனில் ஆகியோருடன் ஒரு சராசரி குடும்பமாக வசித்து வருகிறார் என காட்டப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த இரண்டு பாகங்களிலும் அவர்களது வீட்டு சமையலறையும் டைனிங் ஹாலும் படத்தில் பிரதான இடம் பிடித்திருந்தன. இந்த நிலையில் அப்படி இந்த மூன்றாம் பாகத்திலும் ஒரு டைனிங் ஹால் காட்சியை படமாக்கிய இயக்குனர் ஜீத்து ஜோசப் அதிலிருந்து ஒரு புகைப்படத்தை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.