இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
தெலுங்கு திரையுலகில் சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா போன்ற சீனியர் நடிகர்கள் ஒரு பக்கம், பிரபாஸ், அல்லு அர்ஜுன், ராம்சரண் போன்ற இளம் முன்னணி ஹீரோக்கள் இன்னொரு பக்கம் ஆதிக்கம் செலுத்தி வந்தாலும் இவர்கள் மத்தியில் யாருடனும் போட்டியின்றி தனக்கான ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டு வெற்றி நடை போட்டு வருபவர் நடிகர் ரவிதேஜா. கடந்த 35 வருடங்களாக தெலுங்கு திரையுலகில் தாக்குப்பிடித்து நிலைத்திருக்கும் இவர் 75 படங்களில் நடித்து முடித்து விட்டார்.
இந்த நிலையில் தற்போது அவரது 76வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தை இயக்குனர் திருமலா கிஷோர் இயக்க உள்ளார். அது மட்டுமல்ல வரும் 2026 சங்கராந்தி பண்டிகை ரிலீஸாக இந்த படம் வெளியாக இருக்கிறது என்றும் இப்போதே அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.