மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
கேரளாவில் பிரபல குணச்சித்திர நடிகராக இருப்பவர் கிருஷ்ணகுமார். தமிழில் தெய்வத்திருமகள், மனிதன் உள்ளிட்ட சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவரது நான்கு மகள்களில் ஒருவரான ஆஹானா கிருஷ்ணா என்பவர் மலையாளத்தில் நடிகையாக லூகா, பதினெட்டாம் படி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இவரது சகோதரிகளில் ஒருவரான தியா கிருஷ்ணா திருவனந்தபுரத்தில் ஓ பை ஓஸி என்கிற நகைக்கடையை நடத்தி வருகிறார். இதில் பணியாற்றிய மூன்று பெண் ஊழியர்கள் கிட்டத்தட்ட 69 லட்சம் ரூபாய் மோசடி செய்திருப்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
உறவினர்களான இந்த மூன்று பெண் ஊழியர்களும் கடந்த வருடம் முதலே இந்த மோசடியை துவங்கியுள்ளனர். அதாவது கடையில் பில் போடும் போது உரிமையாளருக்கான மொபைல் போன் கியூ ஆர் கோடை மாற்றி தங்களில் ஒருவரின் க்யூ ஆர் கோடுக்கு ஸ்கேன் செய்து பணம் அவர்களது அக்கவுண்டுக்கு செல்லுமாறு மாற்றி அமைத்துள்ளனர். பல நாட்களாக நடந்து வந்த இந்த மோசடி சமீபத்தில் நடைபெற்ற ஆடிட்டிங்கின் போது தெரிய வந்துள்ளது.
இது குறித்து அந்த ஊழியர்களை தியா கிருஷ்ணாவும் அவரது தந்தை கிருஷ்ணகுமாரும் விசாரித்ததை தொடர்ந்து, அவர்கள் இருவரும் தங்களை கடத்தியதாகவும் மிரட்டியதாகவும் கூறி சம்பந்தப்பட்ட ஊழியர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதே சமயம் தியா கிருஷ்ணா தங்களிடம் உள்ள சிசி டிவி காட்சிகள் உள்ளிட்ட ஆதாரங்களை வெளியிட்டுள்ளதுடன் எப்படி இவ்வளவு குறுகிய காலத்தில் அவர்களுக்கு இவ்வளவு பணம் வந்தது என்று கேள்வி எழுப்பி உள்ளனர். இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட அந்த மூன்று ஊழியர்களும் பணத்தை திருப்பிக் கொடுத்து விடுவதாக கூறினாலும் அவர்கள் செய்தது மிகப்பெரிய மோசடி என்பதால் காவல்துறை மூலமாகவே இந்த வழக்கை சந்திக்க தியா கிருஷ்ணாவும் அவரது தந்தை கிருஷ்ணகுமாரும் முடிவு செய்துள்ளனராம்.