நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் | நிவேதா பெத்துராஜுக்கு திருமணம் | 'திரெளபதி' இரண்டாம் பாகத்தில் சரித்திர கதை | பிளாஷ்பேக் : காமெடி நாயகனாக விஜயகாந்த் நடித்த படம் | சிரிப்பு சத்தம், காமெடி பஞ்சத்தில் தவிக்கும் தமிழ் சினிமா | பிளாஷ்பேக் : உலகம் முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோற்ற கதை | ‛பெத்தி' பட பாடலுக்கு ஆயிரம் பேருடன் நடனமாடிய ராம்சரண் | தீபாவளி போட்டியில் டீசல் : ஆக்ஷன் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் | அங்கிளான என்னை அண்ணனாக மாற்றிவிட்டார் பஹத் பாசில் ; இயக்குனர் சத்யன் அந்திக்காடு பெருமிதம் | ரீல்ஸ் பைத்தியமாக நடிக்கும் வர்ஷினி வெங்கட் |
மலையாளத்தில் பிக்பாஸ் சீசன் 5 தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த ஐந்தாவது சீசனையும் மோகன்லாலே தொடர்ந்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு போட்டியாளர்களுக்கிடையே அவர்களது காதல் கதை பற்றி சொல்லுமாறு ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. அந்த டாஸ்க்கின் போது போட்டியாளர் அனியன் மிதுன் என்பவர், தான் ஒரு ஆர்மி கமாண்டோ பெண் ஒருவரை காதலித்ததாக கூறினார். அந்த பெண்ணிடம் தன் காதலை சொன்னதற்காக காத்திருந்த தருணத்தில் தான் அவர் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்தார் என்றும், காதல் கைகூடாமல் போனாலும் கூட, தனது காதலி நாட்டுக்காக உயிரிழந்தது பெருமை என்றும் கூறினார்.
ஆனால் சனிக்கிழமை நிகழ்ச்சியில் பங்கேற்ற மோகன்லால் அனியன் மிதுன் கூறிய தகவல் பொய் என்றும், அவர் கூறியது போன்று ஒரு பெண்ணே ஆர்மி கமாண்டோவாக இல்லை என்றும் கூறினார். ஆனாலும் தான் கூறியதில் அனியன் மிதுன் விடாப்பிடியாக நின்றார். இதனைத் தொடர்ந்து கோபமான மோகன்லால், நான் கிட்டத்தட்ட 15 வருடங்களாக கௌரவ லெப்டினன்ட் கலோனலாக இருக்கிறேன். எனக்கு எல்லா மட்டத்திலும் ஆட்கள் இருக்கிறார்கள். நான் விசாரித்துவிட்டு தான் கூறுகிறேன். இது போன்று பொய் கதைகளை கூறுவதை இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள் என்று எச்சரிக்கை செய்தார். அதன் பிறகு தான் சைலண்ட் ஆனார் அனியன் மிதுன்.