நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
மலையாளத் திரையுலகில் கடந்த 35 ஆண்டுகளாக, நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக நடித்து வருபவர் லீம்குமார். இடையில் சில காலம் உடல்நிலை சரியில்லாமல் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தவர், பின்னர் முன்பு போல மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். இயக்குனராக மாறி ஒரு படத்தையும் இயக்கினார். இந்த நிலையில் சலீம் குமாரின் வாழ்க்கை வரலாறு 'ஈஸ்வரா வழக்கில்லல்லோ' என்கிற பெயரில் புத்தகமாக தொகுக்கப்பட்டுள்ளது. இந்த புத்தக வெளியீட்டு விழா சமீபத்தில் சலீம்குமாரின் சொந்த ஊரான வட பரவூரில் நடைபெற்றது.
இந்த விழாவில் நடிகர் குஞ்சாகோ போபன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இந்த புத்தகத்தை வெளியிட்டார். நடிகரும், இயக்குனருமான ரமேஷ் பிஷரோடி இந்த புத்தகத்தை பெற்றுக் கொண்டார். இந்த புத்தகத்திற்கு வைக்கப்பட்டுள்ள அதே தலைப்பில் சலீம்குமார் ஒரு படத்தை இயக்க இருந்ததாகவும் அந்த படத்தில் தான் நடிக்க இருந்ததாகவும் கூறிய ரமேஷ் பிஷரோடி, அதன் பிறகு சலீம்குமாரின் உடல்நிலை காரணமாக தாங்கள் எல்லாம் சேர்ந்து அவரை படம் இயக்க வேண்டாம் என்று கூறிவிட்டதாக கூறினார். அதனால் அந்த படத்திற்கான தலைப்பையே இந்த புத்தகத்திற்கு வைத்துவிட்டதாகவும் ஒரு புதிய தகவலை அவர் தெரிவித்தார்..