Advertisement

சிறப்புச்செய்திகள்

‛ஜெயிலர் 2' படப்பிடிப்பில் யோகி பாபுவிடம் அடிக்கடி சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொண்ட ரஜினிகாந்த் | பாலகிருஷ்ணாவுடன் செல்பி எடுக்க பயப்படும் ‛காந்தாரா' ஒளிப்பதிவாளர் | ‛ஆடு 3' படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆடி இருக்கிறாரா நிகிலா விமல் ? ; இயக்குனர் பதில் | ஒருவர் பின் ஒருவராக போகிறார்கள் ; நண்பர் மறைவால் அமிதாப் பச்சன் வேதனை | ஷோரூம் திறப்பு விழாவில் அரசியல் பஞ்ச் டயலாக் பேசிய ரவி மோகன்! | தனது 100வது படத்தில் முதல் பட நாயகனான மோகன்லாலை நடிக்க வைக்கும் பிரியதர்ஷன்! | அஜித்துக்கு 30 லட்சம் மதிப்பிலான காரை பரிசளித்த மஹிந்திரா நிறுவனம்! | விஜய் குறித்த கேள்வி: பதில் கொடுக்காமல் மவுனமாக கடந்து சென்ற திரிஷா! | உயரே சென்றாலும் உதவியவர்களை மறக்காதே: கென் கருணாஸிற்கு தனுஷ் அறிவுரை | '29' படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது! |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சம்பளத்துக்கு பதிலாக ஷேர் வாங்கும் அல்லு அர்ஜுன்!

08 பிப், 2026 - 08:48 IST
எழுத்தின் அளவு:
Allu-Arjun-buys-shares-instead-of-salary!
Advertisement


'புஷ்பா -2' படத்தை அடுத்து அட்லி இயக்கும் சயின்ஸ் பிக்சன் படத்தில் நடித்து வருகிறார் அல்லு அர்ஜுன். இப்படத்தில் அவருடன் தீபிகா படுகோனே, மிருணாள் தாக்கூர், ஜான்வி கபூர் உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும், இந்த படத்தில் நடிப்பதற்கு அல்லு அர்ஜுன் வாங்கும் சம்பளம் குறித்த ஒரு தகவல் தற்போது டோலிவுட் மீடியாக்களில் வெளியாகியுள்ளது.

அதில், அட்லி இயக்கும் இந்த படத்தில் தான் நடிப்பதற்கு சம்பந்தப்பட்ட பட நிறுவனத்திடம் படத்தின் லாபத்தில் தனக்கு 30 சதவீதம் ஷேராக தரவேண்டும் என்று அவர் பேசி இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. இதேபோல்தான் புஷ்பா-2 படத்திலும் வசூலில் 27 சதவீதம் ஷேர் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது.

அந்த வகையில், கிட்டத்தட்ட 1000 கோடிக்கு மேல் புஷ்பா 2 திரைப்படம் வசூலித்த நிலையில் இந்த படத்திற்கான ஷேர் ஆக அல்லு அர்ஜூன் 270 கோடி பெற்றிருப்பார் என்கின்றனர். இந்த கணக்கின்படி பார்த்தால் ரஜினி, விஜய் மட்டுமல்ல ஹிந்தி நடிகர்களை விட அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்கிற பெயரை அல்லது அர்ஜுன் பெற்றுவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.
மேலும், தற்போது 'வாரணாசி' படத்தை இயக்கி வரும் இயக்குனர் ராஜமவுலியும் அந்த படத்தின் வெளிநாட்டு உரிமையை தனது சம்பளமாக தருமாறு பட நிறுவனத்திடம் பேசி இருப்பதாகவும் டோலிவுட் வட்டார தகவல் தெரிவிக்கிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மீண்டும் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்ட திரிஷா!மீண்டும் ஜிம்மில் ஒர்க்அவுட் ... ‛திரிஷ்யம் 3' கிளைமாக்ஸ் ஷாக்கிங் ஆக இருக்கும் : நடிகை ஆஷா சரத் ‛திரிஷ்யம் 3' கிளைமாக்ஸ் ஷாக்கிங் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap