ஒரே காரில்... ஒரே கலரில்...: ஜோடியாக திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய், திரிஷா | சாரா அர்ஜுனின் வளர்ச்சி பெருமையாக உள்ளது! - சொல்கிறார் இயக்குனர் ஏ.எல்.விஜய் | விஜய்யின் ஜனநாயகனுக்கு மார்ச் 17ல் சென்சார் சான்றிதழ்! | லெஜெண்ட் சரவணனின் 'லீடர்' படத்தின் டீசர் வெளியானது! | சிக்ஸ் பேக் விபரீதமான முயற்சி! - நடிகர் பரத் | மார்ச் 27ம் தேதியன்று திரைக்கு வரும் ஹாப்பி ராஜ்! | சொன்ன தேதிக்கு முன்பே திரைக்கு வருகிறது 'உஸ்தாத் பகத்சிங்' | 3 வருடங்களுக்கு பிறகு நாயகியாக நடிக்கும் ரைசா வில்சன் | ஆங்கிலோ இந்திய பெண்ணாக நடிக்கும் ப்ரீத்தி முகுந்தன் | நடிகர் ஆனார் அஜித் அண்ணன் |

தமிழில் ‛கர்ணன், ஜெய் பீம்', கடந்த தீபாவளியன்று வெளியான ‛பைசன் காளமாடன்' உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர் மலையாள நடிகை ரஜிஷா விஜயன். இவரது நடிப்பில் அடுத்ததாக மலையாளத்தில் வரும் பிப்.,13ம் தேதி வெளியாக இருக்கும் படம் ‛மஸ்திஸ்கா மரணம்'.
இந்த படம் 2046ல் நிகழும் கதையாக உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் கதாநாயகி சினிமா நடிகை கதாபாத்திரமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்காக ரஜிஷா விஜயன் தனது உடலை கட்டுமஸ்தாக மாற்ற வேண்டி இருந்ததால் இதற்காக ஆறு மாதங்கள் இடைவிடாமல் ஜிம்மிற்கு சென்று பயிற்சி மேற்கொண்டு உள்ளார். இதற்கு முன்னதாக ‛ஜூன்' என்கிற படத்திற்காக இதுபோன்று நன்கு ஜிம் பயிற்சி எடுத்து நடித்திருந்தது எனக்கு ஞாபகம் வந்து விட்டது என ரஜிஷா விஜயன் கூறியுள்ளார்.




