பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'கர்ணன்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் மலையாள நடிகை ரஜிஷா விஜயன். அதைத் தொடர்ந்து சூர்யா நடித்த 'ஜெய் பீம்' படத்திலும் கார்த்தி நடித்த 'சர்தார்' படத்தில் அவருக்கு ஜோடியாகவும் நடித்திருந்தார். தொடர்ந்து மலையாள படங்களிலேயே கவனம் செலுத்தி நடித்து வந்த இவருக்கு கடந்த 2024ல் எந்த ஒரு படமும் ரிலீஸ் ஆகவில்லை.. அதே சமயம் இந்த வருடம் தமிழில் இரண்டு, மலையாளத்தில் இரண்டு என நான்கு படங்களில் நடித்த வருகிறார் ரஜிஷா விஜயன். அதில் சர்தார் படத்தின் இரண்டாம் பாகமும் ஒன்று.
அது மட்டுமள்ள கர்ணன் படத்தின் மூலம் இவரை தமிழுக்கு அழைத்து வந்த இயக்குனர் மாரி செல்வராஜின் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள 'பைசன் காளமாடன்' படத்திலும் இவர் கதாநாயகியாக நடித்துள்ளார். இது தவிர மலையாளத்தில் மம்முட்டி வில்லனாக நடிக்கும் 'களம் காவல்' படத்தில் கதாநாயகியாக நடிக்கும் ரஜிஷா, தற்போது ஆண்டனி வர்கீஸ் கதாநாயகனாக நடிக்கும் 'கட்டாளன்' படத்திலும் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதில் பைசன் மற்றும் சர்தார் 2 ஆகிய படங்கள் இந்த வருடமே வெளியாக வாய்ப்பு இருப்பதால் இந்த வருடம் ரஜிஷா விஜயனுக்கு கை கொடுக்கும் என எதிர்பார்க்கலாம்.