இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

தனுஷ் நடித்த 'கர்ணன்' படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் மலையாள நடிகை ரஜிஷா விஜயன். அடுத்ததாக 'ஜெய்பீம்' படத்தில் சமூக ஆர்வலராக நடித்து பாராட்டுகளை பெற்றார். தொடர்ந்து 'சர்தார்' படத்தில் கார்த்தியின் ஜோடியாகவும் நடித்தார். தொடர்ந்து தெலுங்கில் ரவி தேஜாவின் 'ராமராவ் ஆன் டூட்டி', பஹத் பாசிலுடன் 'மலையான் குஞ்சு' என பிசியாக நடித்து வந்த இவரது நடிப்பில் கடந்த 2023ல் மட்டும் ஐந்து படங்கள் வெளியாகின. ஆனால் கடந்த 2024ல் இவர் நடித்த ஒரு படம் கூட வெளியாகவில்லை.
இதற்கு காரணம் சில வருடங்களில் கூடிய அவரது உடல் எடை தான் என்று கூட சொல்லப்பட்டது. தமிழில் தற்போது மீண்டும் கார்த்தியுடன் 'சர்தார் 2' மற்றும் மாரி செல்வராஜ் டைரக்ஷனில் உருவாகி வரும் 'பைசன்' ஆகிய படங்களிலும் ரஜிஷா விஜயன் நடித்து வருகிறார். மீண்டும் ஸ்லிம்மான தோற்றத்திற்கு மாறி பட வாய்ப்புகளை பெறும் நோக்கில் கடுமையான உடற்பயிற்சி செய்து வந்த ரஜிஷா விஜயன் ஆறு மாதங்களில் 15 கிலோ எடை குறைத்து படு ஸ்லிம்மாக மாறி உள்ளார்.
இதற்காக கடுமையான டயட் எதையும் கடைபிடிக்காமல் உடற்பயிற்சி மற்றும் தேவையான உணவுப் பொருட்களை மட்டுமே எடுத்துக் கொள்வது என இந்த எடை குறைப்பை சாத்தியப்படுத்தி உள்ளார். இந்த பயிற்சியின் போது அவருக்கு பலவிதமான காயங்களும் ஏற்பட்டுள்ளன. இந்த நிலையில் ஆறு மாத பயிற்சிக்கு முன் மற்றும் பயிற்சிக்கு பின் என தனது தோற்றத்தையும் தனக்கு காயம்பட்ட புகைப்படங்களையும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார் ரஜிஷா விஜயன்.