இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
தெலுங்கு படத்தயாரிப்பு நிறுவனம், தெலுங்கு இயக்குனர், தெலுங்கு இசையமைப்பாளர் என இருப்பதால் 'குபேரா' படத்திற்கான அறிவிப்புகளிலும் தெலுங்கு மொழிக்கு முன்னுரிமை தருகிறார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இப்படத்தை நிச்சயம் பான் இந்தியா படமாக வெளியிட உள்ளார்கள். ஆனால், படப்பிடிப்பை தமிழ், தெலுங்கில் நடத்தியுள்ளார்களா அல்லது தெலுங்கில் மட்டும் நடத்தியுள்ளார்களா என்பது படம் வந்த பின்புதான் தெரியும்.
இப்படத்திற்கான முதல் சிங்கிள் ஏப்ரல் 20ம் தேதி வெளிவரும் என்று அறிவித்துள்ளார்கள். இரு தினங்களுக்கு முன்பு தனுஷ் மட்டுமே இடம் பெற்ற ஒரு அறிவிப்பு வீடியோவில் படத்தின் டைட்டில்களை படம் வெளியாக உள்ள மொழிகளில் குறிப்பிடும் போது தெலுங்கிற்குப் பிறகே தமிழ் இடம் பெற்றுள்ளது.
தனுஷுக்குத் தெலுங்கை விடவும் தமிழில்தான் ரசிகர்கள் அதிகம், வசூல் அதிகம். அப்படியிருக்க தமிழுக்கு முன்னுரிமை தராமல், தெலுங்கிற்கு முன்னுரிமை தருவதை படக்குழு மாற்றுமா என்பது தமிழ் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.